ஐபிஎல் 2025

ஸ்ரேயாஸ் இந்த வேலையை செஞ்சது எனக்கு ஆச்சரியம்.. ஏன்னா அவர் மும்பை.. காரணம் இதான் – அம்பதி ராயுடு பேச்சு

நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய சதத்தை பற்றி கவலைப்படாமல் விளையாடி தியாகம் செய்தது குறித்து அம்பதி ராயுடு ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரை எதிர்கொண்ட ஷஷான்க் சிங் ஐந்து பவுண்டரிகள் உட்பட 23 ரன்கள் எடுத்தார். இந்த ஓவர் முழுவதுமாக அவரே விளையாடியதால் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் எடுக்க முடியவில்லை.

முன்கூட்டியே சொன்ன ஸ்ரேயாஸ்

குஜராத் அணி கடைசி ஓவர் வீசுவதற்கு முன்பாகவே தன்னுடைய சக பேட்ஸ்மேன் ஷஷான்க் சிங்கிடம் ஸ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் பந்து பவுண்டரி அடிக்க கிடைத்தால் தொடர்ந்து அடிக்கும் படியும் கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து ஷஷான்க் சிங் அந்த குறிப்பிட்ட ஓவரில் ஐந்து பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுக்க கடைசியில் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் எடுத்த இந்த முடிவு இறுதியில் அணி வெற்றி பெறுவதற்கும் முக்கிய காரணமாக இருந்ததால், சுயநலமில்லாமல் அவர் விளையாடியது குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் மும்பை மற்றும் சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கும் அம்பதி ராயுடு இதுகுறித்து பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

இதில் ஆச்சரியமே இதுதான்

தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் வட்டத்தில் பெரிய ரசிகர் பட்டாளம் கிடையாது. ஆனால் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடிய இந்த ஆட்டத்தின் மூலமாக கணிசமாக அவர்களுக்கு ரசிகர்கள் உருவாக ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவருடைய முதல் ஆட்டமே பஞ்சாப் அணிக்கு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கில்லுக்கு கேப்டன்சி செய்ய தெரியல.. இன்னும் தயாராகல.. நேத்து இதுதான் சாட்சி – சேவாக் விமர்சனம்

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அம்பதி ராயுடு ” குறிப்பாக சதத்தை தியாகம் செய்துள்ள இந்த விஷயம் ஒரு மும்பை பேட்ஸ்மேன் இடம் இருந்து வருகிறது. ஏனென்றால் நீங்கள் மும்பையில் கிரிக்கெட்டராக வளர்ந்து வரும் பொழுது சதம், சதம் என எப்பொழுதும் அது குறித்தே பேசுவார்கள். எனவே இது ஒரு முக்கியமான மாற்றம். நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் இது மிகவும் புத்திசாலித்தனமானது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts