விராட் போதாது இந்த 4 பேர் விக்கெட் வேணும்.. இனி சுனில் நரைன்கிட்ட பேச மாட்டேன் – வருண் சக்கரவர்த்தி பேச்சு

0
199
Virat

நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் விக்கெட் மட்டும் தனக்கு போதாது என்றும் இன்னும் நான்கு பிரபல பேட்ஸ்மேன்கள் வேண்டும் என்றும் வருண் சக்கரவர்த்தி கூறியிருக்கிறார்.

இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பை மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை வென்று ஒரு போட்டியை தோற்று இருக்கிறது.

- Advertisement -

இவர்கள் விக்கெட் வேண்டும்

ஐபிஎல் தொடர் குறித்து பேசி இருக்கும் வருண் சக்கரவர்த்தி பேசும் பொழுது “நிச்சயமாக எல்லா பேட்ஸ்மேன்களும் நல்ல பேட்டிங் ஃபார்மில் இருப்பார்கள். எனக்கு விராட் கோலியின் விக்கெட் என்று மட்டும் இல்லாமல், ஹென்றி கிளாசன், நிக்கோலஸ் பூரன், ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற நட்சத்திர வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்”

“உங்களுக்கு ஏற்கனவே ஒரு நல்ல போட்டி கிடைத்திருக்கலாம். ஆனால் நீங்கள் மீண்டும் புதிதாக ஆரம்பிக்க வேண்டும். இதைத்தான் உங்களுக்கு கிரிக்கெட் கற்றுக் கொடுக்கிறது. இதுதான் இதில் இருக்கும் மிகவும் முக்கியமான பாடம். உங்களுக்கு நல்ல மூன்று போட்டிகள் அமைந்திருக்கலாம். ஆனால் நீங்கள் அதையெல்லாம் மறந்துவிட்டு பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்”

- Advertisement -

நான் கற்றுக் கொண்டது இதுதான்

“இதுவரை நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் விஷயங்களை எளிமையாக வைத்திருக்க வேண்டும். வித்தியாசமாக ஒன்றை செய்ய முயற்சி செய்யக் கூடாது. மேஜிக் பந்து வீச முயற்சி செய்யக் கூடாது. மேலும் ஒரு மேஜிக் தருணத்தை உருவாக்க முயற்சி செய்யக் கூடாது. நீங்கள் அடிப்படை விஷயங்களில் ஒட்டிக்கொண்டு வழக்கமான வேலைகளை தொடர்ந்து செய்ய வேண்டும்”

இதையும் படிங்க : சிஎஸ்கே மேட்ச் முன்ன எனக்கு உடம்பு சரியில்ல.. ஆனா டிராவிட் சொன்ன அதுக்காக வந்தேன் – நிதிஷ் ராணா பேட்டி

“இப்போது நான் சுனில் நரைன் உடன் 5 வருடங்கள் விளையாடி இருக்கிறேன். இது எனக்கு ஆறாவது ஆண்டு. இனி அவருடன் பந்துவீச்சு குறித்து நான் அதிகம் பேச வேண்டியது இல்லை. அவர் இனி எதையும் கரண்டி வைத்து ஊட்டி விட தேவை இல்லை. நான் அவரிடமிருந்து என்ன கற்றுக் கொண்டு விட்டாலும் கூட, இனியும் அவர் என்ன செய்கிறார் என்று என்னால் கவனித்து தெரிந்து கொள்ள முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -