ரியான் பராக்குக்கு நடந்த சோகம்.. வேதனையான 2 மோசமான சாதனைகள்.. அசாம் ஆரம்பம் வீணானது

0
71
Parag

நடப்பு ஐபிஎல் தொடரை இளம் கேப்டனாக ரியான் பராக் சாதனையுடன் தொடங்கினாலும் அவருக்கு முதல் இரண்டு ஆட்டங்களில் விரும்பத்தகாத மோசமான சாதனைகளும் உடன் வந்திருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விரலில் காயம் அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதல் மூன்று போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட முடியாததால் இம்பேக்ட் பிளேயராக வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அணியின் கேப்டனாக ரியான் பராக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

இளம் கேப்டனாக சாதனை

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இளம் கேப்டன் ஆக மட்டும் இல்லாமல், ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு அணியை கேப்டனாக வழிநடத்தும் மூன்றாவது இளம் கேப்டனாகவும் சாதனை செய்தார். இவருக்கு முன்பாக ஸ்மித் மற்றும் ரெய்னா இருவரும் குறைந்த வயதில் கேப்டனாக வழி நடத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அசாம் மாநில கிரிக்கெட்டுக்கு கேப்டனாக சிறப்பாக வழி நடத்தி உள்ள ரியான் பராக் ஐபிஎல் தொடரிலும் கேப்டன் பொறுப்பில் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிர்காலத்தில் கேப்டன் ஆகவும் நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கருதப்பட்டது. ஆனால் சாதனையுடன் ஆரம்பித்த அவரது கேப்டன் பொறுப்பு மோசமான சாதனையுடன் முடிவுக்கு வரப் போகிறது.

- Advertisement -

மோசமான இரண்டு சாதனைகள்

ரியான் பராக் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 286 ரன்கள் விட்டுக் கொடுத்தது. இது தனிப்பட்ட முறையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விட்டுக் கொடுத்த மிக அதிகபட்ச ரன் ஆகவும், ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் விட்டுக் கொடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ரன் ஆகவும் பதிவாகியது.

இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற யாருமே தங்களுடைய முதல் இரண்டு போட்டிகளை இதுவரை தோற்றது கிடையாது. குறைந்தபட்சம் ஒரு போட்டியை வென்று இருக்கிறார்கள். ஆனால் ரியான் பராக் கேப்டனாக இரண்டு போட்டிகளையும் தோற்று இருக்கிறார்.

இதையும் படிங்க: சேப்பாக்கம் சிஎஸ்கேவின் கோட்டை.. ஆர்சிபி இத செஞ்சா மட்டுமே தப்பிக்க முடியும் – ஷேன் வாட்சன் அறிவுரை

இரண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன்

ஷேன் வார்ன்: 1 வெற்றி, 1 தோல்வி
ஷேன் வாட்சன்: 1 வெற்றி, 1 தோல்வி
ராகுல் டிராவிட்: 2 வெற்றி, 0 தோல்வி
ஸ்டீவ் ஸ்மித்: 2 வெற்றி, 0 தோல்வி
அஜிங்க்யா ரஹானே: 1 வெற்றி, 1 தோல்வி
சஞ்சு சாம்சன்: 1 வெற்றி, 1 தோல்வி
ரியான் பராக்: 0 வெற்றி, 2 தோல்வி

- Advertisement -