தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் இனி சுயமாக செயல்பட வேண்டும் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறியிருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் அணியின் மென்டராக இந்திய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜாகிர் கான் இருவரும் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் ரிஷப் பண்ட் எப்பொழுதும் அடுத்தவர்கள் முடிவை சார்ந்து இருப்பதாக தெரிகிறது.
தடுமாறும் ரிஷப் பண்ட்
தற்போது ரிஷப் பண்ட்டின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் சுமாராக இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் வழக்கமாக வரும் நான்காவது இடத்தில் வராமல் தாமதமாக ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்பாக ஒரு போட்டியிலும் அவர் தன்னுடைய இடத்தை விட்டுக் கொடுத்திருந்தார்.
பொதுவாக ரிஷப் பண்ட் அதிரடியான பேட்டி முறைக்கு பெயர் போனவர். இப்படிப்பட்ட ஒரு பேட்ஸ்மேனை அவருடைய நான்காவது இடத்தில் களம் இறக்காமல், அவருக்கு பேட்டிங் ஃபார்ம் இல்லை என கீழே அனுப்புவது பெரிய விமர்சனமாக மாறியிருக்கிறது. இதற்கு லக்னோ அணியின் பயிற்சியாளர் மற்றும் மெண்டர் இருவரும் காரணம் என்று கூறப்படுகிறது.
ரிஷப் பண்ட் சுயமாக முடிவெடுக்க வேண்டும்
இது குறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “உண்மையில் ரிஷப் பண்ட் தனக்குத்தானே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அவர் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டும். அணியின் உள்ளுக்குள்ளேயே அவர் எல்லாவற்றையும் பேச வேண்டும். வெளியில் கொண்டு வந்து எதையும் செய்யக்கூடாது. லக்னோ அணியில் முடிவுகள் எடுக்கும் கட்டுப்பாட்டை ரிஷப் கையில் கொண்டு வர வேண்டும்”
இதையும் படிங்க : 174 ரன்.. தோற்றது பங்களாதேஷ் வென்றது ஜிம்பாப்வே.. ஆனால் சிக்கியது பாகிஸ்தான் அணி.. சுவாரசிய சம்பவம்
“அவர் பேட்டிங் ஆர்டரில் மேலே வர வேண்டும். இதற்காக எந்த சாக்குப் போக்கும் சொல்லக்கூடாது. ஒரு கேப்டனாக இருந்து அவர் விளையாட வேண்டும் மேலும் முடிவுகளையும் எடுக்க வேண்டும். மயங்க் யாதவை உள்ளே கொண்டு வருவதற்காக நேற்று சில முடிவுகளை எடுத்திருக்கலாம். ஆனால் அணி முன்னோக்கி செல்வதற்கு ரிஷப் பண்ட் பேட்டிங் ஆர்டரில் மேலே வர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






