சுரேஷ் ரெய்னாவின் இன்ஸ்டாகிராம் நேரலையில் உருக்கமாக கமெண்ட் செய்த அம்பத்தி ராயுடு

0
132
Ambati Rayudu and Suresh Raina

சுமார் 12 ஆண்டுகளாக சென்னை அணிக்கு விளையாடிய சுரேஷ் ரெய்னா சென்னை அணி வெற்றி பெற்ற மூன்று வருடங்கள் 2010,2011 மற்றும் 2018இல் மிக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

இருப்பினும் கடந்த ஆண்டு அவர் சரியாக விளையாடாத காரணத்தினால் அவரை சென்னை அணி இந்த ஆண்டு கைப்பற்றவில்லை. நடந்து முடிந்த மெகா ஏலத்தில் கூட அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.இதனையடுத்து நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக தனது புதிய பணியை செய்து வருகிறார்.

- Advertisement -
இன்ஸ்டாகிராமில் கமெண்ட செய்த அம்பத்தி ராயுடு

இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அக்கவுண்ட்டில் நேரலையில் சுரேஷ் ரெய்னா வந்தார். நேரலையில் சுரேஷ் ரெய்னா வர்ணனை செய்து கொண்டிருக்க ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர்.

அதில் அம்பத்தி ராயுடுவும் இணைந்தார். “வீ மிஸ் யூ சுரேஷ் ரெய்னா” என்று உருக்கத்துடன் ராயுடு கமெண்ட் செய்தார். ஒரு ரசிகர் அவர் போல கமெண்ட் செய்தது, ரசிகர்கள் அனைவரையும் உணர்ச்சியடைய செய்தது.

சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு எந்த அளவுக்கு பக்கபலமாக இருந்து இருக்கிறார் என்பது இந்த ஒரு கட்டுரையில் கூறிவிட முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பாக கடந்த ஒரு ஆண்டில் அவருடைய ஆட்டம் எதிர்பார்த்த அளவில் இல்லை. இந்த ஆண்டு அவர் விளையாட முடியாமல் போனதுக்கு அதுவே முக்கிய காரணமாகவும் அமைந்தது.

- Advertisement -

சென்னை அணியில் இனி சுரேஷ் ரெய்னா விளையாடுவாரா அல்லது விளையாடமாட்டாரா என்பது பற்றி உறுதியாக கூறிவிட முடியாது. ஆனால் சுரேஷ் ரெய்னா சென்னை அணிக்கு செய்த பங்களிப்பை இனி ஒரு வீரர் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது மிகவும் சவாலான காரியம் என்பதே நிதர்சன உண்மை.