“பழைய பகையை தீர்த்துக் கொண்டனர் ” – 2019 உலகக்கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அம்பத்தி ராயுடு வெளிப்படையான பேச்சு!

0
1328

சமீபத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு பதினாறாவது ஐபிஎல் தொடருடன் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்திருக்கிறார் அம்பத்தி ராயுடு. 37 வயதான ராயுடு ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்தவர்.

19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து 2004 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணியை வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது . திறமையான அதிரடி பேட்ஸ்மியான இவர் எனக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படாததால் பிசிசிஐ கிரிக்கெட்டில் இருந்து விலகி கபில்தேவ் தலைமையிலான ஐசிஎல் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

2010 ஆம் ஆண்டு பிசிசிஐ வழங்கிய பொது மன்னிப்பை ஏற்று மீண்டும் முதல் தர கிரிக்கெட்டிற்கு திரும்பிய ராயுடு அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடிய அனைவருக்கும் கவனத்தையும் ஈர்த்தார் . இதன் மூலம் இந்திய அணிக்கும் தேர்வானார். தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் இந்திய அணிக்கு சிறப்பாக பங்களிப்பை அளித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்திய அணியிலும் இடம் பெற்று இருந்தார் அம்பத்தி ராயுடு. இதுவரை 58 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவிற்காக ஆடி இருக்கும் ராயுடு 1694 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் பத்து அரை சதங்களும் மூன்று சதங்களும் அடங்கும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இவரது சராசரி 47.06 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 79.05.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு இந்திய அணிக்கு நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருதப்பட்டவர் ராயுடு அந்த உலகக்கோப்பைக்கு முன்பாக இந்தியா அணிக்கு நான்காவது பேட்ஸ்மனாக தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வந்தார் . ஆனால் உலகக்கோப்பைக்கு முன்பாக இவரை நீக்கிவிட்டு விஜய் சங்கரை தேர்வு செய்தது இந்திய கிரிக்கெட் அணி . இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படையாகவே காட்டினார் அம்பத்தி ராயுடு .

- Advertisement -

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் 3டி கண்ணாடி ஒன்றின் புகைப்படத்தையும் பதிவிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது . அடுத்த உலக கோப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தான் எதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக பேசியிருக்கிறார் அம்பத்தி ராயுடு .

இது குறித்து தெலுங்கு செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் அவர் தேர்வுக்கு குழுவில் இருந்த உறுப்பினர் ஒருவருடன் தனக்கு ஏற்பட்ட மோதலின் காரணமாகவே தான் அணியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார் . தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டங்களில் அந்த தேர்வு குழு உறுப்பினர் உடன் விளையாடும் போது ஏற்பட்ட மோதல் தான் அவர் தன்னை அணியில் இருந்து நீக்குவதற்கு காரணம் எனவும் தெரிவித்திருக்கிறார் அம்பத்தி ராயுடு.