ஐபிஎல் 2024

ஆர்சிபி கத்தி கொண்டாடினா.. சிஎஸ்கேவை மட்டும் ஜெயிச்சா.. ஐபிஎல் கோப்பை தர மாட்டாங்க – அம்பதி ராயுடு விமர்சனம்

நேற்று ஐபிஎல் தொடரில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. ஆர்சிபி அணி பரிதாபமாக இந்த முறையும் கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது. இது குறித்து அம்பதி ராயுடு விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி ஒரு ஓவர் மீதம் வைத்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதான வெற்றி பெற்றது. இதன் காரணமாக 17 வது வருடமும் ஐபிஎல் தொடரில் கோப்பை இல்லாமல் ஆர்சிபி அணி வெளியேறியிருக்கிறது.

ஆர்சிபி அணி தங்களின் கடைசி லீக் போட்டியில், தங்கள் சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றார்கள். அப்போது மைதானத்தில் அவர்களுடைய கொண்டாட்டம் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. குறிப்பாக விராட் கோலி ரசிகர்களை பார்த்து சைலன்ஸ் என்பது போல செய்கையெல்லாம் செய்தார்.

மேலும் மைதானத்திற்கு வெளியே ஆர்சிபி ரசிகர்கள் தவறான முறையில் சிஎஸ்கே ரஸ்கர்களிடம் நடந்து கொண்டார்கள் என நிறைய புகார்கள் சமூக வலைதளங்களிலும் வெளியாகியிருந்தது. சிஎஸ்கே அணி ரசிகர்கள் அனைவரும் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என செய்தி வெளியிடும் அளவுக்கு நிலைமை மாறியது. தற்போது ஆர்சிபி அணி ராஜஸ்தான் அணியிடம் தோற்று வெளியேறியிருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு பேசும் பொழுது “இன்று ஆர்சிபி அணியை பற்றி பேசும்பொழுது வெறும் ஆர்வங்களும் கொண்டாட்டங்களும் மட்டுமே கோப்பையை வெல்ல உதவாது என்பதை காட்டுகிறது. நீங்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல திட்டமிட வேண்டும். ப்ளே ஆப் சுற்றில் சென்று கோப்பையை வெல்லவில்லை. தொடர்ந்து ஒரே பசியுடன் விளையாட வேண்டும். சிஎஸ்கே அணியை வெல்வது மட்டுமே ஐபிஎல் கோப்பையை வெல்வது ஆகாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க: நான் அந்த ஒரு தப்பை மட்டும் பண்ணி இருந்தா.. ஆர்சிபி கிட்ட வசமா மாட்டியிருப்போம் – ரோமன் பவல் பேட்டி

ஆர்சிபி அணி நிர்வாகம் இந்திய வீரர்கள் திறமையை நம்ப வேண்டும். கடந்த 16 ஆண்டுகளில் அந்த அணிக்கு எந்த இந்திய வீரர்களும் ஆயிரம் ரன்கள்அடிக்கவில்லை என நினைக்கிறேன். விராட் கோலி மட்டுமே அந்த அணிக்கு 8000 ரன்கள் அடித்திருக்கிறார். இது அணி நிர்வாகத்திற்கு இந்திய வீரர்கள் திறமை மீது நம்பிக்கை இல்லை என்பதை காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.

Published by