92 ஆண்டுகள்.. பும்ரா படைத்த அரிய சாதனை.. கேப்டன்சியில் தவறிய ரோகித் சர்மா.. இந்திய அணிக்கு வாய்ப்பு உண்டா?

0
788

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா சேனா நாடுகளில் பிரமாண்டமான சாதனையை படைத்து அசத்தியிருக்கிறார்.

தற்போது பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நேற்று மழையின் காரணமாக 13.2 ஓவர்கள் மட்டுமே பந்த வீசப்பட்டது. ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பில்லாமல் 28 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisement -

மீண்டும் தலைவலியான ஹெட்

இன்று இரண்டாம் நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவஜா 21, நாதன் மெக்ஸ்வீனி 9 தங்கள் எடுத்து பும்ரா பந்துவீச்சில் வெளியேறினார்கள். லபுசேன் 12 ரன்கள் எடுத்து நிதீஷ் குமார் ரெட்டி பந்துவீச்சில் வெளியேறினார். ஆஸ்திரேலியா அணி 75 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

இந்த நிலையில் ஸ்மித் உடன் ஜோடி சேர்ந்த ஹெட் வழக்கம் போல் அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 115 பந்தில் தொடர்ந்து இரண்டாவது சதத்தை அடித்தார். இதற்கிடையில் 500 நாட்கள் தாண்டி சதம் அடிக்காமல் இருந்து வந்த ஸ்மித்தும் சதம் அடித்தார். இந்த ஜோடி 302 பந்தில் 241 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஸ்மித் 101, ஹெட் 152 ரன் குவித்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

மீண்டும் வந்து கலக்கிய பும்ரா

இதைத்தொடர்ந்து புதிய பந்தை கையில் எடுத்த பும்ரா சிறப்பாக விளையாடி வந்த ஹெட், ஸ்மித், மார்ஸ் தொடர்ந்து முக்கிய மூன்று பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்பினார். அடுத்து கேப்டன் பேட் கம்மின்ஸ் 20 ரன்கள் எடுத்து முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இன்று முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 405 ரன்கள் குவித்து இருக்கிறது. இந்திய தரப்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இன்று ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றியதின் மூலம் சேனா நாடுகளில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஐந்து விக்கெட் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை, 92 வருட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பும்ரா நிகழ்த்தி இருக்கிறார். பும்ரா எட்டு முறை சேனா நாடுகளில் ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்க, இரண்டாவது இடத்தில் லெஜன்ட் கபில்தேவ் ஏழுமுறை ஐந்து விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.

இதையும் படிங்க  ரோகித் மறுபடியும் ஹெட்டுக்கு இந்த தப்ப செஞ்சுட்டார்.. நல்ல வாய்ப்பு போயிடுச்சு – ஹர்பஜன் சிங் வருத்தம்

இந்த முறையும் கேப்டன் ரோஹித் சர்மா ஹெட்டுக்கு சரியான திட்டங்களுடன் வரவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. அவர் உள்ளே வந்த பொழுது ஆரம்பத்தில் ஜடேஜா மற்றும் நிதீஷ் குமாரை விளையாடும் அளவுக்கு ரோகித் சர்மா பந்து வீச்சில் மாற்றங்கள் செய்யாமல் இருந்தார். இந்த போட்டியில் இந்திய அணி மீண்டு வர வேண்டும் என்றால் குறைந்தது 400 ரன்கள் எடுத்தால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -