12 அணிகள்.. தொடங்கிய தமிழ்நாட்டு புச்சி பாபு தொடர்.. போட்டிகள் எப்போது எங்கு பார்க்கலாம்.?.. முழு விவரம்

0
22

இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான புச்சி பாபு கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் முன்னணி வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெறுவதால் இது தற்போது அதிக கவனம் பெரும் தொடராக அமைந்துள்ளது.

வங்கதேச அணிக்கு எதிராக செப்டம்பர் 19ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் இந்தத் தொடர் இந்திய வீரர்களுக்கு மிகச் சிறந்த பயிற்சி போட்டியாக அமையும்.

- Advertisement -

தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான புச்சி பாபு கிரிக்கெட் சீசன் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் தமிழக வீரர்களுக்கு குறிப்பாக எதிர்காலத்திற்கான மிகப்பெரிய தொடராக அமைகிறது. மொத்தம் 12 அணிகள் பங்குபெறும் இந்த தொடரில் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் ஏ பிரிவில் மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ஹைதராபாத் அணிகளும் குரூப் பி பிரிவில் ரயில்வே, குஜராத், டிஎன்சி ஏ பிரசிடெண்ட்ஸ் அணிகளும் குரூப் சி பிரிவில் மும்பை, ஹரியானா, டிஎன்சி ஏ அணியும் குரூப் டி பிரிவில் ஜம்மு காஷ்மீர்,பரோடா, சத்தீஸ்கர் அணிகளும் பங்கு பெறுகின்றன.

இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். அதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தமிழகத்தில் 10 அணிகள் பங்கேற்கும் வகையில் நான்கு மைதானங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தத் தொடரானது ரஞ்சி டிராபி தொடர் போல நான்கு நாட்கள் நடைபெறும் வகையில் அமையும்.

இந்த தொடரை பொருத்தவரை முதல் சுற்று ஆகஸ்ட் 15 முதல் 18ஆம் தேதி வரையிலும், இரண்டாவது சுற்று ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், மூன்றாவது சுற்று 27 முதல் 30-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. அரை இறுதிப் போட்டிகள் செப்டம்பர் 2 முதல் 5ம் தேதி வரை நடைபெறும். இறுதிப்போட்டி 8 முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் போட்டி இன்று காலை 09.30 மணிக்கு தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத்தொகையாக மூன்று லட்சமும், இறுதிப் போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு இரண்டு லட்சமும் வழங்கப்பட உள்ளது. இதில் சிறப்பம்சமாக இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷான், சர்பராஸ் கான் மற்றும் முசீர் கான் ஆகிய புகழ்பெற்ற வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெறுவதால் இது அதிக கவனம் பெரும் தொடராக அமைந்துள்ளது.

இதையும் படிங்க:ரோகித்தை எச்சரிக்கும் ரவி சாஸ்திரி.. நம்ம அவங்களுக்கு செஞ்சத திருப்பி செய்ய காத்திருக்காங்க.. இதுதான் அவங்களோட நோக்கம்

புச்சி பாபு கிரிக்கெட் தொடர் எந்த சேனல்களிலும் ஒளிபரப்படாது. ரசிகர்கள் இந்தப் போட்டியை கண்டுகளிக்க விரும்பினால் டிஎன்சிஏ ஆப்ஸ் மற்றும் யூடியூப் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ரசிகர்கள் இந்த தொடர்களை கண்டு ரசிக்கலாம்.