இந்திய கிரிக்கெட்

நான் பார்த்தேன்.. விராட் கோலி சாம் கான்ஸ்டாஸ் பிரச்சனைக்குப் பிறகு இதான் நடந்தது – அலெக்ஸ் கேரி பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி மற்றும் 19 வயது இளம் ஆஸ்திரேலிய வீரரான சாம் கான்ஸ்டாஸ் உரசிக்கொண்ட விவகாரம் பெரிய பேசு பொருளானது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இந்த சம்பவம் குறித்த சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணியில் விளையாட வாய்ப்பு பெற்ற 19 வயது வீரர் சாம் கான்ஸ்டாசை இந்திய சீனியர் வீரரான விராட் கோலி களத்தில் நடந்து சென்ற போது அவரை உரசி விட்டு சென்றார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பெரிய பேசு பொருளானது. மேலும் ஒரு சீனியர் வீரர் இளம் வீரருக்கு அது போன்ற செய்யக்கூடாது என்று விராட் கோலியின் மீது சில விமர்சனங்களும் இருந்தது. இதனைத் தொடர்ந்து விராட் கோலிக்கு 20% போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து தற்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

அந்த புகைப்படத்தை பார்த்தேன்

அதாவது இதுகுறித்து அலெக்ஸ் கேரி கூறும் பொழுது “இந்த சம்பவம் நடைபெற்றது எனக்கு தெரியாது, அதற்குப் பிறகு விராட் கோலி மற்றும் ஷாம் இருவரும் கைகுலுக்கி சமரசத்துக்கு வந்த புகைப்படத்தை பார்த்தேன். இது டெஸ்ட் கிரிக்கெட். எனக்கு இந்த நிகழ்வு குறித்து 100% என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் இளம் வீரர் சாம் அது குறித்து எதையும் மனதில் வைத்துக் கொண்டதாகவும் நான் அறியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:கம்பீரின் அந்த விஷயம் எப்படி வெளியே வந்தது?.. இது நல்லது இல்ல – இர்பான் பதான் கண்டனம்

இருப்பினும் இந்திய அணி அந்த நிகழ்வுக்குப் பிறகு நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறது. தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டியிலும் இந்திய அணி ஒரு போட்டியிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் ஐந்தாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை இழக்காமல் டிரா செய்துவிட்டு இந்தியா திரும்ப முடியும். எனவே அடுத்த போட்டியில் வெற்றி பெற இந்திய வீரர்கள் மிகத்தீவிரமாக தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by