“500 விக்கெட் எடுத்த அஸ்வினுக்கே புரியல.. லஞ்ச் டைமுக்கே உங்க ஸ்கோர் பத்தாது” – அலைஸ்டர் குக் பேச்சு

0
606
Cook

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில், நேற்று இரண்டாவது நாளின் கடைசி செசனில் அதிரடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்து, அந்தக் குறிப்பிட்ட நேர ஆட்டத்தின் மூலமாகவே போட்டிக்குள் வந்துவிட்டது.

இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் அடித்திருக்க, நேற்று 30+ ஓவர்களை சந்தித்த இங்கிலாந்து இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்கள் அதிரடியாகக் குவித்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் இந்த ரன் குவிப்புக்கு அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் மிக முக்கிய காரணமாக இருந்தார். அவருடைய மாடர்ன் கிரிக்கெட் ஷாட்களுக்கு இந்திய பந்துவீச்சாளர்களிடம் பதில் இல்லை.

நேற்று அவர் 88 பந்துகளை சந்தித்து தனது முதல் சதத்தை இந்தியாவில் அடித்தார். வெளிநாட்டவர்கள் இந்தியாவில் அடித்த அதிவேக மூன்றாவது சதமாக இது பதிவானது. நேற்று மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் இவர் விளையாடியது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பெரிய நெருக்கடியை உண்டாக்கியது.

இன்றைய போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இருக்க மாட்டார் என்கின்ற காரணத்தினால், கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீச்சாளர்களை சுழற்றுவது பெரிய பிரச்சனையாக இருக்கும். மேலும் இன்று முழு நாள் இங்கிலாந்து தொடர்ச்சியாக விளையாடினால் 600 ரன்கள் கடந்து கூட அடிக்க முடியும்.

- Advertisement -

நேற்று பென் டக்கெட் பேட்டிங் குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் குக் ” 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஒரு பந்துவீச்சாளரை, எங்கு பந்து வீசுவது என்று புரியாமல் போகும் அளவுக்கு டக்கெட் ஆக்கியுள்ளார். இதுமிகவும் அசாதாரணமான ஒன்று. அவர் விளையாடிய ஸ்வீப்புகளை விளையாட நிறைய திறமை வேண்டும். ஃபீல்டர்களை எங்கு வைத்தாலும், அவர்கள் இல்லாத இடத்தை பார்த்து அவர் அடித்தார்.

அவர் இதை எப்படி செய்கிறார் என்று நான் பார்க்க விரும்புகிறேன். அவர் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து எந்தவித அச்சமும் இல்லாமல் அந்த இடத்தில் அடிக்க பார்க்கிறார்.

இந்தியா இன்று மிகச் சிறப்பான பந்துவீச்சை கொண்டு வரவேண்டும். அவர்கள் டக்கெட்டை துரத்தக்கூடாது. பாஸ்பாலின் அதிரடியால் இந்தியா சற்று பீதி அடைந்திருப்பதாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : போட்டியின் நடுவில் விலகிய அஷ்வின்.. பவுலிங் பேட்டிங் செய்ய மாற்று வீரர் அனுமதி உண்டா?.. என்ன நடக்கும்?

இங்கிலாந்துக்கு நேற்று போல் ஒரே ஒரு செஷன் அமைந்தால், இந்தியாவின் ஸ்கோருக்கு மதிய உணவு இடைவேளையின் போது வந்துவிடும். அதாவது 445 ரன்கள் எடுக்க முடியாது. ஆனால் நான் ஒரு ரன்கள் எடுக்க முடியும். பென் டக்கெட் இருந்தால் இந்தியாவுக்கு பெரிய அழுத்தம் உண்டாகி விடும்” எனக் கூறியிருக்கிறார்.