இந்திய கிரிக்கெட்

நான் இந்த இந்திய வீரரை தான் மிஸ் பண்றேன்.. அவர் ஏபி டிவில்லியர்ஸ் மாதிரி – ஆலன் டொனால்ட் பேட்டி

தென் ஆப்பிரிக்க லெஜன்ட் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் ஒரு இந்திய வீரரை தான் சர்வதேச கிரிக்கெட்டில் தவறவிடுவதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் அவர் அந்த குறிப்பிட்ட இந்திய வீரர் தென் ஆப்பிரிக்க டி20 லீக்கில் கலந்து கொண்டு விளையாட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட்டில் முதல் முறையாக வேகப்பந்துவீச்சுக்காக பெரிய அளவில் உலகெங்கும் கவனிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கிரம் ஓய்வு முடிவு

ஆலன் டொனால்ட் குறிப்பிட்ட அந்த இந்திய வீரர் விராட் கோலி. தற்போது விராட் கோலி ஒருநாள் வடிவத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்ற காரணத்தினால், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர்ந்து விளையாடி இருக்க வேண்டும் என்கின்ற கருத்துகள் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சில முன்னால் வீரர்கள் அவர் ஓய்வு முடிவை கைவிட வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வரும் எண்ணத்தில் இல்லை என்றும் தெரிகிறது. அவர் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் விளையாடி, அங்கிருந்து அப்படியே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஏபி டிவில்லியர்ஸ் மாதிரி

இது குறித்து ஆலன் டொனால்ட் கூறும்பொழுது ” உண்மையிலேயே நான் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலியை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அவரும் ஏபி டிவில்லியர்ஸ் மாதிரி சீக்கிரத்தில் ஓய்வு பெற்று விட்டார். ஆனால் நாம் அவரை சீக்கிரம் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவில் வைத்து பார்க்கப் போகிறோம். அவர் உலகக் கோப்பையில் வந்து விளையாடுவார் என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் கிடையாது”

இதையும் படிங்க: கேமரா மட்டும் இல்லனா.. ரோஹித் என்கிட்ட அவ்வளவுதான்.. மன்னிச்சு விட்டுட்டேன் – இந்திய வீரர் சஹால்

“அதே சமயத்தில் ஓய்வு பெற்றுவிட்ட விராட் கோலி சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் கலந்து கொண்டு விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார். இப்போதைக்கு தினேஷ் கார்த்திக் தவிர எந்த இந்திய வீரரும் அந்தத் தொடரில் கலந்து கொண்டு விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by
Tags: Allan donald