இந்திய கிரிக்கெட்

நான் மூன்றாவது டெஸ்டில் ஃபாலோ ஆனை தவிர்க்க நினைக்கல.. ஹெட்டுக்கு இந்த பிளான் ரெடி – ஆகாஷ் தீப் பேட்டி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்காக தான் விளையாடவில்லை என இந்திய வீரர் ஆகாஷ் தீப் ஆச்சரியப்படும் விதமாக பேட்டி அளித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் அவருடைய பேட்டியில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர அதிரடி பேட்ஸ்மேன் ஹெட் விக்கெட்டை கைப்பற்றுவதற்கான திட்டம் தங்களிடம் இருப்பதாகவும். அதை தொடர்ச்சியாக தாங்கள் நான்காவது டெஸ்ட் போட்டியில் செயல்படுத்துவோம் என்றும் அதிரடியாக கூறியிருக்கிறார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியை சாதாரணமாகிய ஆகாஷ் தீப்

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஃபாலோ ஆன் ஆகியிருந்தால், அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடையா விட்டாலும் கூட இந்திய அணி தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்பட்டது. மேலும் அந்தப் போட்டி பரபரப்பான ஒரு கட்டத்தை எட்டவும் வாய்ப்புகள் இருந்தது.

இப்படியான ஒரு நிலையில் பேட்டிங் வரிசையில் 11 வது வீரராக வந்த ஆகாஷ் தீப் இந்திய அணியை ஃபாலோ ஆன் ஆபத்தில் இருந்து அதிரடியாக விளையாடி காப்பாற்றினார். இந்திய டிரெஸ்ஸிங் ரூமில் இதை வீரர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். மீண்டும் நல்ல சூழல் திரும்பி இருக்கிறது.

- Advertisement -

ஃபாலோ ஆனுக்கு விளையாடவில்லை

இதுகுறித்து ஆகாஷ் தீப் கூறும் பொழுது “நாங்கள் கீழ் வரிசையில் பேட் செய்ய வருகிறோம் அங்கு நாங்கள் 25 முதல் 30 ரன்கள் எடுத்தால் அது மிகவும் மதிப்பு மிக்கதாக இருக்கும். அப்போது எனது மனநிலை அணிக்கு பங்களிக்க வேண்டும். என்பது மட்டுமே இருந்தது ஃபாலோ ஆன் பற்றி நான் நினைக்கவில்லை. கடவுள் விரும்பியதால் அதிலிருந்து நாங்கள் தப்பிக்க முடிந்தது”

“இப்போது எங்கள் திட்டங்களை நாங்கள் வெளிப்படுத்த முடியாது. ஆனால் நாங்கள் ஒரே பந்து வீச்சு திட்டத்தில் தொடர்ந்து செயல்படுவோம். ஸ்டெம்பில் இரண்டு பக்கத்தில் இருந்தும் பந்து வீசுவோம். ஆடுகளம் மற்றும் சூழ்நிலைகளை வைத்து நாங்கள் திட்டத்தை மீண்டும் உருவாக்குவோம்”

இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியின் இந்த நிலைமைக்கு காரணம் இந்தியாதான்.. வீரர்கள் அழுதார்கள் – இமாம் உல் ஹக் பேட்டி

“ஹெட் குறிப்பாக ஷார்ட் பந்துகளுக்கு எதிராக போராடுகிறார் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் அவரை கிரீசில் நிலையாக இருக்க அனுமதிக்க மாட்டோம். நாங்கள் குறிப்பிட்ட பகுதிகளை குறி வைத்து பந்து வீசி அவரை தவறுகளில் தள்ளுவோம். இது எங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Akash deep

Recent Posts