இந்திய அணியில் இவரை மட்டும் கடவுள் வித்தியாசமாக படைச்சிட்டார்.. வேற லெவல் அறிவாளி – ஆகாஷ் தீப் புகழ்ச்சி

0
692
Akash

இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் இந்திய அணியில் தனது சக வீரர் ஒருவர் குறித்து மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார். அந்த குறிப்பிட்ட வீரரை கடவுள் வித்தியாசமாக படைத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆகாஷ் தீப் அறிமுகமானார். அந்த போட்டியில் அவரது பந்துவீச்சை கவனம் ஈர்ப்பதாக இருந்தது. எனவே பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இரண்டாவது வாய்ப்பைப் பெற்று சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் எதிர்கால திட்டம்

தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு துறையில் ஜஸ்பிரித் பும்ரா முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் என மூவர் மட்டுமே மிகவும் நம்பிக்கை அளிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே இதற்கு அடுத்து ஒரு செட் பாஸ்ட் பவுலர்களை எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இப்பொழுதே கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருக்கிறது.

இந்த அடிப்படையில் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் மற்றும் ஒரு இடதுகை வேகப் பந்துவீச்சாளருக்கான தேடலில் யாஷ் தயால் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறது. இதில் இன்னும் யாஷ் தயால் இந்திய அணிக்கு அறிமுகமாகும் வாய்ப்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடிய விரைவில் பரிசோதனை முயற்சியில் அவரும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று பந்து வீசுவார் என எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

கடவுள் அவரை வித்தியாசமாக படைத்து விட்டார்

இந்த நிலையில் தன்னுடைய சீனியர் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பற்றி ஆகாஷ் தீப் கூறும்போது “நான் பும்ரா பாய் உடன் தொடர்ந்து பேசுகிறேன். அவருடைய பந்துவீச்சை நான் மிக நெருக்கத்தில் இருந்து கவனித்து வருகிறேன். அவர் முற்றிலும் வித்தியாசமானவர். கடவுள் அவரை வித்தியாசமாக படித்திருக்கிறார். நான் அவரிடம் நிறைய டிப்ஸ் பெற்றேன்”

“நான் அவருடன் மனநிலை குறித்து நிறைய பேசி தெரிந்து கொண்டிருக்கிறேன். குறிப்பாக பந்து வீசும் போது ஒரு குறிப்பிட்ட பேட்ஸ்மேனின் மனநிலை குறித்து நான் அவரிடம் கேள்வி கேட்டேன். அந்தக் கேள்விக்கு அவர் வேல்யூவான பாயிண்ட்களை எனக்கு சொன்னார்”

இதையும் படிங்க : எங்ககிட்ட 2 பேர் இருக்காங்க.. ஆனா இதை ஆரம்பிச்ச ரிஷப் பண்ட்டை சைலன்ட் பண்ணனும் – பேட் கம்மின்ஸ் பேச்சு

“அவர் மிகவும் அறிவார்ந்த ஒரு வீரர். அவருடைய அறிவு அவருடைய பந்துவீச்சிலும் எதிரொலிக்கும். அவர் பந்து வீசுவதற்கு முன்பாக பேட்ஸ்மேன் ரீட் செய்யும் விதம் ஆச்சரியமாக இருக்கிறது. அவர் மிக மிக திறமையானவர். அவரைப் பின்பற்றுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -