என் பவுலிங் பார்ட்னர் வாசிம் அக்ரமைவிட பும்ராதான் சிறந்தவர்.. நாங்க இந்த அளவு இல்ல – வக்கார் யூனுஸ் பேச்சு

0
109
Bumrah

கிரிக்கெட் உலகில் பந்து வீச்சில் வாசிம் அக்ரமை விட பும்ராதான் சிறந்தவர் என தன்னிடம் வக்கார் யூனுஸ் கூறியதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை வலது கை வாசிம் அக்ரம் என கூறப்படுவதுண்டு. இந்த நிலையில் வாசிம் அக்ரமை விட பும்ராவே சிறந்தவர் என வக்கார் யூனுஸ் கூறியதாக தற்பொழுது ஆகாஷ் சோப்ரா மிகப்பெரிய விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

பும்ரா வாசிம் அக்ரம் ஒப்பீடு

தற்போதைய காலகட்டத்தில் பும்ரா மட்டுமே மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருக்கிறார். சிலர் ஏதாவது இரண்டு அல்லது ஒரு வடிவத்தில் மட்டுமே சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார்கள். உதாரணத்துக்கு இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவரும் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் என்ற போதும் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே சிறந்தவர்களாக இருந்தார்கள்.

இதேபோல வாசிம் அக்ரம் தான் விளையாடிய காலகட்டத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். மேலும் இருவருமே பந்துவீச்சில் துல்லியம் மற்றும் கட்டுப்பாட்டில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். எனவே தான் இவர்கள் இருவரையும் எப்பொழுதும் ஒப்பீடு செய்து வருகிறார்கள்.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா தகவல்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “நாங்கள் ஒரு காரில் இருந்தோம். அதில் என்னுடன் வக்கார் யூனிஸ் இருந்தார். அப்போது வாசிம் அக்ரம் பந்துவீச்சில் இருக்கும் வேரியேஷன், துல்லியம் மற்றும் அவருடைய கட்டுப்பாட்டுக்காக உலகமே மதிக்கிறது. அவர் மிகச் சிறந்தவராக இருக்கிறார். இதே காரணங்களுக்காக பும்ராவை வலதுகை வாசிம் அக்கரம் என கூறலாமா? என்று அவரிடம் கேட்டேன்”

இதையும் படிங்க : 178 ரன்.. சூரிய குமாரை தாண்டி டிம் டேவிட் உலக சாதனை.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது ஆஸி அணி

“அதற்கு அவர் வாசிம் அக்ரமை விட சிறந்தவர் பும்ராதான் என்று கூறினார். ஏனென்றால் பும்ரா வயதில் தங்களுடைய சிந்தனை செயல்முறை இவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை என்றும், ஆனால் பும்ராவின் சிந்தனை மற்றும் திட்டமிடல் யாரையும் விட சிறப்பாக இருப்பதாகவும், இதனால் பும்ராவே சிறந்தவர்” என்று அவர் கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -