இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்திய வீரர்கள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்றம்
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் தொடக்க பேட்ஸ்மேன்கள் தடுமாற, மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். அதே சூழல் அதற்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவிலேயே வெளியேறிய காரணத்தால் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று விளையாடி அணியை திரும்பவும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற வைத்தனர்.
முதல் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 29 ரன்களும், அபிஷேக் ஷர்மா 16 ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். அதேபோல இரண்டாவது டி20 போட்டியில் சாம்சன் 10 ரன்களும், அபிஷேக் ஷர்மா 15 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து வருவது குறித்து வருத்தப்படுவார்கள் என சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நிச்சயமாக வருத்தப்படுவீர்கள்
இது பற்றி அவர் விரிவாக கூறும்போது ” நான் கடைசியாக பேச விரும்புவது தொடக்க ஆட்டக்காரர்கள் குறித்து. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக இருக்கிறார்கள். இரண்டு டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்து விட்டது. ஆனாலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இன்னும் வெளிப்படுத்தவில்லை. மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடும் உரிமை உங்களிடத்தில் இருக்கிறது.
இதையும் படிங்க:700/3.. இங்கிலாந்து அணி புது ரெக்கார்டு.. பாகிஸ்தானில் இந்தியாவின் 20 வருட சாதனை உடைந்தது.. அதிரடி பேட்டி
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் போது ருத்ராஜ், ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கலாம். மேலும் சஞ்சு மற்றும் அபிஷேக் ஆகியோரும் இருக்கிறார்கள். திடீரென்று பார்த்தால் இப்போது ஐந்து தொடக்க வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஐந்து பேரும் விளையாட முடியாது. இசான் கிஷானும் சிறிது காலம் கழித்து தொடக்க வரிசையில் இடம் பிடிக்கலாம். அந்த சூழ்நிலையில் நீங்கள் பார்த்தால் கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து விட்டோம் என்று வருத்தப்படலாம்” என கூறி இருக்கிறார்.