கம்பீரால் என் இதயம் வேகமா துடிக்குது.. கில் சூர்யா ப்ளீஸ் இந்த பேச்சை நிறுத்துங்க – இந்திய முன்னாள் வீரர் கோரிக்கை

0
51
Gambhir

இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக, சில பேச்சுக்களை சூரியகுமார் மற்றும் கில் இருவரும் நிறுத்த வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய அணி டி20 வடிவத்தில் உலக சாம்பியனாக இருக்கிறது. சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி மற்ற அணிகளை விட முன்கூட்டியே தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்திய அணியில் நிறைய கேள்விகள் இருக்கின்றன.

- Advertisement -

இந்திய அணியின் பிரச்சனை

தற்போது இந்திய டி20 அணியின் டாப் ஆர்டரில் கில் மற்றும் சூரியகுமார் இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ரன் எடுக்க தடுமாறுவதோடு சீக்கிரத்தில் விக்கெட் கொடுக்கிறார்கள். இதனால் டாப் ஆர்டரில் வேகமான சரிவு ஏற்படுகிறது. எனவே இவர்களுக்கு அடுத்து வந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாட முடிவதில்லை.

தற்போது டி20 உலகக் கோப்பைக்கு சரியான இந்திய பிளேயிங் லெவன் எது என்பது இன்றுவரையில் கண்டறிய முடியவில்லை. இந்த நிலையில் சூரியகுமார் மற்றும் கில் இருவரும் ரன்கள் எடுக்க வில்லை என்றால் கேள்விகள் பெரிய அளவில் மாறும். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கும்.

- Advertisement -

இதயத்துடிப்பு அதிகமாகின்றது

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “டி20 உலகக் கோப்பைக்கு மிக அருகில் நாம் இருக்கிறோம். இந்த நிலையில் உங்களுடைய பேட்டிங் ஆர்டர் என்ன? உங்கள் அணியில் யாரெல்லாம் இருக்கப் போகிறார்கள்? என்கின்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த உண்மை என்னுடைய இதயத்துடிப்பை மிகவும் அதிகமாக வருகிறது. இது இந்திய அணிக்கு சீரியஸான பிரச்சனை”

இதையும் படிங்க : இப்பவே சொல்றேன்.. சிஎஸ்கே பிளேயிங் XI இதுதான்.. ஆர்சிபி முன்னாள் கோச் அதிரடி கணிப்பு

“அடுத்த மூன்று போட்டிகளில் சூர்யா மற்றும் கில் இருவரும் ரன்கள் எடுக்க வேண்டும். அவர்கள் ரன்கள் எடுத்தால் இந்திய அணி பலமாக இருக்கும். மேலும் தற்போது இவர்களை சுற்றி நடக்கும் பேச்சுகள் நிறுத்தப்படும். அதை இவர்கள் சிறப்பாக விளையாடி தடுத்து நிறுத்த வேண்டும். ஒருவேளை கில் ரன்கள் எடுக்கவில்லை என்றால் அவருடைய இடம் ஆபத்தில் இருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடக்க கூடாது. அப்படி நடந்தால் உலகக் கோப்பைக்கு இன்னும் நெருக்கத்திலும் கேள்விகளே அதிகம் இருக்கும். நான் இப்போது இவர்கள் குறித்து எதுவும் பேசப்போவதில்லை. இதிலிருந்து நான் விலகி இருக்கப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -