அடுத்த ஆண்டு 2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்து ஆர்சிபி முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சிஎஸ்கே ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமாக அமைந்தது. மேலும் புள்ளி பட்டியலில் முதல் முறையாக சிஎஸ்கே கடைசி இடத்தை பிடித்திருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே மாற்றங்களை செய்ய சிஎஸ்கே அணி நிர்வாகம் ஆரம்பித்துவிட்டது.
ஆறாவது இடம் இந்த பையனுக்கு
இதுகுறித்து பேசி உள்ள சஞ்சய் பாங்கர் கூறும் பொழுது ” சிஎஸ்கே அணி நிர்வாகம் கடந்த சீசன் இடையே தங்கள் மறுக்கட்டு அமைப்பை ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் தங்கள் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்தவுடன் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க தொடங்கினார்கள். அவர்கள் ஆயுஸ் மத்ரேவை கண்டறிந்தார்கள். அவர் நிச்சயம் சிஎஸ்கே பிளேயிங் லெவனில் இருப்பார். மூன்றாவது இடத்தில் விளையாடுவார்”
“துவக்க இடத்தில் ருதுராஜ், சஞ்சு சாம்சன் வருவார்கள். நான்காவது இடம் இன்னும் சிஎஸ்கே அணிக்கு திறந்த வெளியாகவே இருக்கிறது. அவர்கள் அந்த இடத்திற்கு ஒரு புதிய வீரரை கொண்டு வருவார்கள். என்னைப் பொறுத்த வரையில் பிரிவிஸ்க்கு ஐந்தாவது இடத்தை தராமல் ஆறாவது இடத்தை தர வேண்டும். அங்கு அவரால் சிறப்பாக இருக்க முடியும். ஐந்தாவது இடத்தில் சிவம் துபே வரவேண்டும்”
இவரை ஏலத்தில் வாங்கலாம்
“நாதன் எல்லிஸ் பிளேயிங் லெவனில் இருப்பார். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர் பந்துவீச்சில் மாற்றங்கள் செய்திருக்கிறார். அவரால் தற்போது புதிய பந்திலும் பந்து வீச முடியும். மேலும் அவர் மிகச் சிறந்த ஃபீல்டரும் கூட. இத்துடன் அவர் அணிக்கான வீரர்”
இதையும் படிங்க: 234 ரன்.. 48 பந்தில் ருத்ர தாண்டவம் ஆடிய ஜெய்ஸ்வால்.. கம்பீருக்கு பேட்டால் பதில்.. மும்பை அபார வெற்றி
“ஓவர்டன் விளையாடுவாரா என்பது ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து அமையும். தற்போது சிஎஸ்கே கையில் பணம் இருக்கிறது. எனவே அவர்கள் லிவிங்ஸ்டனை வாங்குவதற்கு முயற்சி செய்வார்கள். அவரை அவர்கள் நான்காவது இடத்தில் விளையாட வைப்பார்கள்” என்று கூறி இருக்கிறார்.






