இந்திய நட்சத்திர வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கு எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கும் நபர்கள் குறித்து ஏபி டிவில்லியர்ஸ் மிகவும் காட்டமான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறார்கள். மேலும் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவார்களா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
கரப்பான் பூச்சிகள் ஏன் வருகிறது?
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களில் சிலர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிப்பது குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் மிகவும் கோபமான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். இருவரையும் மீண்டும் கொண்டாடுவதற்கான சரியான நேரம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “மக்களை பத்தி எனக்கு புரியல. இவங்கள முதல்ல மக்கள் சொல்லலாமானு தெரியல. வீரர்கள் தங்களுடைய கடைசி காலகட்டத்தில் இருக்கும் பொழுது இந்த கரப்பான் பூச்சிகள் பொந்திலிருந்து ஏன் வந்து விடுகின்றன?”
மீண்டும் கொண்டாட வேண்டும்
“தங்கள் நாட்டிற்காகவும் இந்த அழகான விளையாட்டுக்காகவும் உயிரையே கொடுத்து விளையாடி இருக்கக்கூடிய இந்த வீரர்களுக்கு எதிராக ஏன் எதிர்மறையான கருத்துக்களை பரப்ப வேண்டும? இந்த இருவரையும் மீண்டும் கொண்டாடுவதற்கு மிகச் சரியான தருணம் இது”
இதையும் படிங்க: அபிஷேக் ஷர்மா குழப்பத்தை உண்டாக்கக்கூடிய பையன்.. இத செய்யலனா சிக்குனிங்க – ரவி சாஸ்திரி கருத்து
“சில மாதங்களாக அவர்கள் இருவரும் நிறைய விமர்சனங்களை எதிர்கொண்டு இருக்கிறார்கள். என்ன காரணத்திற்காக இவர்கள் இருவரையும் வீழ்த்த துடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெரும்பாலான மக்கள் இவர்கள் இருவரையும் கொண்டாடுகிறார்கள் என்று தெரியும். நான் ஒரு குறிப்பிட்ட சிறிய அளவில் வெறுப்பை உண்டாக்கும் நபர்களைப் பற்றி பேசுகிறேன். மீண்டும் இவர்களை கொண்டாடுங்கள்” என்று கூறியிருக்கிறார்.






