இந்திய அணியை நியூசிலாந்து அணி வெறும் 8 வீரர்களுடன் விளையாடி வீழ்த்தி தொடரை வென்று விட்டதாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 296 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. விராட் கோலி சதம் அடித்துப் போராடியதற்கு பலன் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இந்த தோல்வி நிச்சயம் வலிக்கப் போகிறது. அவர்களுக்கு வலிக்கவும் வேண்டும். நியூசிலாந்து நம்மை டபுள் செய்து விட்டார்கள். முதலில் வந்து டெஸ்ட் தொடரை சிறப்பாக வென்றார்கள். தற்போது அவர்கள் ஒருநாள் தொடரையும் வென்று அசத்தி விட்டார்கள். முதல்முறையாக எட்டு வீரர்கள் மட்டுமே வைத்து நம்மை வென்று விட்டார்கள்”
“இந்த நியூசிலாந்து அணியில் இரண்டு வீரர்கள் அறிமுக வீரர்களாக வேறு இருந்தார்கள். முதல் ஒருநாள் போட்டியில் ராணா 29 ரன்கள் எடுத்தார். கேஎல்.ராகுல் கடைசி வரை இருந்து போட்டியை முடித்து வைத்தார். இது நடக்காமல் போயிருந்தால் இந்திய அணியை மூன்று போட்டிகளிலும் தோற்கடித்திருப்பார்கள்”
“என்னுடைய அணி தரமான அணி என்று நான் நினைத்தேன். எனவே நியூசிலாந்து போராடி சவால் கொடுத்தாலும் தொடரை வெல்ல முடியாது என்று நினைத்தேன். மேலும் இப்படிப்பட்ட ஒரு அணிக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்து இருக்கக் கூடாது. இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாது”
இதையும் படிங்க : கில் கேப்டன்சி தான் தோல்விக்கு காரணம்.. நேத்து மேட்ச்ல இந்த தப்ப பண்ணிருக்காரு – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“ஒரு கட்டத்தில் நியூசிலாந்து 5 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்னொரு கட்டத்தில் 58 ரன்னுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது. ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியால் வெல்ல முடியாதது சரியானது இல்லை” என்று கூறியிருக்கிறார்.