நேற்று கேகேஆர் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி 220 ரன்கள் விட்டுக் கொடுத்தது. இது குறித்து ஆகாஷ் சோப்ரா விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு ரகானே மற்றும் ரகுவன்சி இருவரும் அரை சதம் அடிக்க அந்த அணி 220 ரன்கள் 20 ஓவர்களில் எடுத்து ஆச்சரியப்படுத்தியது.
ஹர்திக் பாண்டியா செய்த தப்பு
நேற்று பவர் பிளேவில் ஹர்திக் பாண்டியா மொத்தம் இரண்டு ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதே சமயத்தில் பவர் பிளே பவுலர் போல்டுக்கு ஒரே ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தார்.
இத்துடன் போட்டியில் மூன்றாவது ஓவரை திடீரென சுழல் பந்துவீச்சாளர் அல்லா கசன்பருக்கு கொடுத்தார். அங்கிருந்து கொல்கத்தா வேகமாக ரன்கள் அடிக்க ஆரம்பித்தது. ஹர்திக் பாண்டியா தொடர்ந்து பவர் பிளேவில் வந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் சொதப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ரா இருந்தும் 220 ரன்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா இருந்தும் அவர்கள் 220 ரன்கள் கொடுத்ததை எப்படி என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ரன்கள் கொடுத்தது ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் பவுலர்களை பயன்படுத்திய விதத்திலும் தவறுகள் செய்தார்கள்”
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி மிஸ்டரி ஹிஸ்டரி.. உன் காலம் முடிஞ்சு போச்சுபா.. நீ உடனே இதை செய்யணும் – ஸ்ரீகாந்த் அறிவுரை
“நேற்றைய போட்டியில் மும்பை தரப்பில் இரண்டு பேர் மட்டுமே தொடர்ந்து இரண்டு ஓவர்கள் பந்து வீசினார்கள். ஒருவர் ஹர்திக் பாண்டியா இன்னொருவர் பும்ரா. புதிய பந்தில் சிறப்பாக வீசும் போல்டுக்கு ஒரு ஓவர் மட்டும் கொடுத்து நிறுத்தியது சரியானது கிடையாது. பவர் பிளேவில் திடீரென சுழல் பந்துவீச்சாளர் ஏன் கொண்டு வந்தார் என்றும் புரியவில்லை. இந்த தவறுகளும் ரன் வருவதற்கு காரணம்” என்று கூறியிருக்கிறார்.






