தற்போது இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே நிலையான இடத்தை பெற்றிருக்கிறார். இந்த நிலையில் அவர் மூன்று வடிவ இந்திய அணிகளிலும் இடம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
இந்திய டெஸ்ட் அணியில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் ஜெய்ஸ்வாலுக்கு சமீபத்தில் இந்திய ஒருநாள் அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் அவர் சதம் அடித்தார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் மாற்றுத் தொடக்க ஆட்டக்காரராக இடம் பிடித்திருக்கிறார்.
இதைச் செய்ய வேண்டும்
ஜெய்ஸ்வால் குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” ஜெய்ஸ்வால் உங்களுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். வருகின்ற ஐபிஎல் சீசனில் நீங்கள் 700 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். நீங்கள் 400 முதல் 450 ரன்கள் எடுத்த சீசன்கள் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு அது போதாது. நீங்கள் ஒவ்வொரு சீசனிலும் இனி சிறப்பான ரன்கள் எடுக்கக்கூடியவராக இருக்க வேண்டும்”
“நீங்கள் இந்திய அணிக்கு செல்ல வேண்டுமென்றால் கதவை உடைத்துக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு உங்களுக்கு ஒரு சீசனில் 700 ரன்கள் தேவை. இப்படி நடந்தால்தான் நீங்கள் மூன்று வடிவ கிரிக்கெட் வீரராக மாற முடியும். நீங்கள் அப்படி மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்”
இது ஆச்சரியம் அளிக்கிறது
“தற்போது இந்திய கிரிக்கெட்டில் எவ்வளவு திறமைகள் இருக்கிறது என்பதை யோசிக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் ஜெய்ஸ்வால் மாதிரியான ஒரு வீரர் 3 வடிவத்திலும் விளையாட முடியாத நிலை இருக்கிறது. அவர் கடந்த ஒரு நாள் தொடரில் சதம் அடித்தார். ஆனால் தற்போது வெளியே போயிருக்கிறார்”
இதையும் படிங்க : நியூசி முதல் ODI.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. உருவாகும் புதிய திட்டங்கள்.. 8வது இடத்தில் ட்விஸ்ட்
“அவர் தற்போது டி20 இந்திய அணியின் அருகில் கூட இல்லை. ஒருநாள் இந்திய அணியில் சமீபத்தில் இடம்பெற்றார். ஆனால் டி20 அணியில் அவரால் நுழையவே முடியவில்லை. உலகக் கோப்பைக்கு முன்பாகவே அவருக்கு இடம் கிடைத்து விடும் என்று நான் நினைத்தேன். ஆனால் தற்போது சூழ்நிலை உலகக்கோப்பை முடிந்த பிறகுதான் மாறும் என்பதாக தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.






