இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்து 27 வருடங்களுக்குப் பிறகு இலங்கை அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரை இழக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விராட் கோலியின் பேட்டிங் குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தத் தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா. கேப்டன் ரோஹித் சர்மா வழக்கம் போல தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் மூன்று போட்டிகளிலும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி விட்டு சென்றார். அதனைப் பயன்படுத்திக் கொள்ள இளம் வீரர்கள் தவறிய நிலையில் சீனியர் வீரரான விராட் கோலியும் போட்டியை கடைசி வரை எடுத்துச் செல்வதற்கு தவறி விட்டார்.
முதல் போட்டியில் 24 ரன்களும், இரண்டாவது போட்டியில் 14 ரன்களும், மூன்றாவது போட்டியில் 20 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார். இந்திய ஆடுகளமாக இருந்தாலும் சரி, ஆசிய கண்டத்தின் எந்த ஆடுகளமாக இருந்தாலும் சரி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி இந்த முறை அதனை தவற விட்டு இருக்கிறார். அதிலும் குறிப்பாக மூன்று முறையும் சுழற்பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்து வெளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் போது “விராட் கோலி சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மூன்று முறையும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இது போன்று கடைசியாக விராட் கோலிக்கு எப்போது நடந்தது என்று எனக்கு நினைவில் இல்லை. அவர் தவறான லைனில் விளையாடியது மட்டுமல்லாமல் மூன்று முறையும் ரிவ்யூ எடுத்து அதனையும் வேஸ்ட் செய்தார்.
விராட் கோலி அவரால் தொடரில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி விளையாட முடியவில்லை. ஸ்ரேயாஸ் ஐயரும் சுழற்பந்துவீச்சில் சிறந்த பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். ஆனாலும் இந்தத் தொடரில் இரண்டு முறை சுழற் பந்துவீச்சுக்கு எதிராகவும் ஒருமுறை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஆட்டம் இழந்தும் வெளியேறி இருக்கிறார். சுழற் பந்துவீச்சுக்கு எதிராக நமது வீரர்கள் நல்ல செயல் திறனை கொண்டிருந்தும் இது ஏன் நடக்கிறது என்று தெரியவில்லை.
இதையும் படிங்க:நம்பர் 1 இந்திய அணியை தோற்கடித்தோம்.. இந்த இந்தியர்தான் எங்க வெற்றிக்கு காரணம் – சனத் ஜெயசூர்யா பேச்சு
ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும்போது பந்து வீச்சாளர்கள் அவருக்கு பந்து வீச பயப்படுவது போல் தெரிகிறது. ஆனால் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியவுடன் மற்ற வீரர்களால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இந்த விதத்தில்தான் இந்தியா ஏமாற்றம் அடைகிறது என்று கூறி இருக்கிறார். எதிர்கால இந்திய அணியின் நட்சத்திரங்களாக கருதப்படும் இளம் வீரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.