இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கில் அணி தேர்வில் ஒரு தவறை செய்தால் அது மிகவும் கேலிக்கூத்தானதாக அமைந்து விடும் என ஆகாஷ் சோப்ரா எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இன்று இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தை கொண்ட எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியை களம் இறங்குகிறது. இந்திய பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கசிந்த தகவல்கள்
இந்த போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் கில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பது போல பேசி இருக்கிறார். அதில் ஒருவர் ரவீந்திர ஜடேஜாவாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதே சமயத்தில் இரண்டாவது சுழல் பந்துவீச்சாளர் யார்? என்பதுதான் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் படி பார்க்கும் பொழுது வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக அணியில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவதாக ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார். இது நடந்தால் இது மிகவும் கேலிக்கூத்தானதாக அமையும் என எச்சரித்திருக்கிறார்.
கேலிக்கூத்து பண்ணிடாதீங்க
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” இங்கிலாந்தில் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி பார்க்கும்பொழுது இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களாக பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் இடம் பெறுவார்கள் எனவும், இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களில் ஜடேஜா இடம் பெறுவார் என்றும். மேலும் இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக வாஷிங்டன் சுந்தரை களமிறக்கப் போகிறார்கள் என்றும் தெரிகிறது. இப்படி செய்தால் இது கேலிக்கூத்தானதாக ஆகிவிடும். எனவே இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவை விளையாட வேண்டும்”
இதையும் படிங்க : அப்படி ஒரு வேலைய அந்த வீரர் செஞ்சதும்.. என் கிரிக்கெட் வாழ்க்கை முடிஞ்சிடுச்சு.. யாரும் என்கிட்ட பேசல – ஷிகர் தவான் பேச்சு
“இப்படி வாஷிங்டன் சுந்தரை விளையாடினால் நிச்சயம் அது ஒரு நல்ல செயல்முறையாக இருக்காது. நீங்கள் குல்தீப் யாதவை விளையாடாவிட்டால் அது மோசமானதாக அமையும். இந்த இருவரில் யார் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பார்த்து அணியை தேர்வு செய்தால், நாம் தவறான மரத்தை பார்த்து குரைத்துக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். இந்த தப்பை செய்ய வேண்டாம்” என்று கூறி இருக்கலாம்.






