பவுலிங் கோச் என்ன செய்றாரு.. டிராவிஸ் ஹெட்டுக்கு இந்த பிளான் ஏன் பண்ணல – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

0
168

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்திய அணியின் பந்து வீச்சு திட்டம் குறித்து சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்

ஆஸ்திரேலியா அடிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அதற்குப் பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ட்ராவிஸ் ஹெட் சதம் அடித்தது அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் டிராவிஸ் ஹெட்டுக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தகுந்த திட்டம் தீட்டி இருக்க வேண்டும்.

ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் சுமாரான பந்துவீச்சை இந்திய அணி வெளிப்படுத்திய நிலையில், ஹெட் திரும்பவும் 152 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையை அடைய முக்கிய காரணமாக இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் குறித்தும், அணியின் பந்து வீச்சு திட்டம் குறித்தும் சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

பவுலிங் கோச் இதை செஞ்சிருக்கணும்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ட்ராவிஸ் ஹெட்டுக்கு நாங்கள் சரியான திட்டம் செயல்படுத்தவில்லை என்று உணர்கிறேன். ஆரம்பத்தில் நாங்கள் மிகக் கடினமாக முயற்சி செய்கிறோம். பின்னர் மிக வேகமாக அதனை கைவிடுகிறோம், அதற்குப் பிறகு காத்திருக்கிறோம் ஆனால் முடிவில் எதுவுமே சரியாக செயல்படவில்லை இது ஒரு சோகமான கதையாக உள்ளது. பயிற்சி ஊழியர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

இதையும் படிங்க:17 ஓவர்.. 267 ஸ்ட்ரைக் ரேட்டில் கலக்கிய ஜூனியர் ஹர்திக்.. சூரியகுமார் மாஸ்.. மும்பை சாம்பியன்.. 2024 SMAT

மோர்னே மோர்கல் அங்கு இருக்கிறார். இந்திய அணியின் பந்துவீச்சு திட்டம் என்ன என்பதை அவர் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். விக்கட்டை சுற்றி அவருக்கு பவுன்ஸ் வீசப் போகிறோமா? அல்லது கவர் ட்ரைவ் திசையில் ஆட வைக்க முயற்சி செய்யப் போகிறோமா? என்று விவரிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலியா அணியின் சிக்கலில் இருக்கும் போது ஹெட் வருகிறார். அவர் வெளியேறும் போது அணி வலுவான நிலைக்கு மாறுகிறது. ஹெட்டுக்கு எதிராக இந்திய அணி திட்டமில்லாமல் இருப்பது அணியை காயப்படுத்துகிறது இது ஒரு நல்ல அறிக்கை அல்ல” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -