ரொம்ப வேதனையா இருக்கு.. ஜெயிச்சாலும் இதுல இந்திய அணியின் பலவீனம் தெளிவா தெரியுது – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
335

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டாலும் இன்னும் வேலை செய்ய வேண்டிய பகுதிகள் நிறைய உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பந்து வீச்சு பலவீனம் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

பலவீனமான வேகப்பந்து வீச்சு

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இடம் பெற்றுள்ள பும்ராவின் உடல்நிலை குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டு ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருந்தாலும் அதன் வேகப்பந்துவீச்சு பலவீனமாகவே உள்ளது. முகமது சமி காயத்தில் இருந்து குணமடைந்து வந்தாலும் இன்னும் அவர் தயாராகவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரன்கள் கசிய விட்டதுடன் விக்கெட்டுகள் எடுக்கவும் தடுமாறி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா முகமது சமி தனது வேகத்தை குறைத்தால் அவரது சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்த முடியாது எனவும், புவனேஸ்வர் குமார் தனது பந்துவீச்சின் வேகத்தை குறைத்தாலும் அதில் அவர் கூர்மையாக இருக்கக்கூடியவர் என்று சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

அவர் இன்னும் தயாராகவில்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நமது வேகப்பந்து வீச்சு மீது நாம் எந்த அளவிற்கு நம்பிக்கையாக இருக்கிறோம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. உண்மை என்னவென்றால் பும்ரா இல்லாதது வேதனை அளிக்கிறது. இதுவரை நாம் பார்த்த அவற்றின் அடிப்படையில் வேகப்பந்து வீச்சு மிகவும் பலவீனமாக ஒன்றாக உள்ளது. முகமது சமி மீண்டும் அணிக்கு திரும்பி இருந்தாலும் அவர் இன்னும் டாப் ஏற எட்டவில்லை. ஆனால் அவர் அந்த இடத்தை உறுதியாக எட்டுவார் என்று நம்பலாம்.

இதையும் படிங்க:ரோஹித் கோலி இல்லை.. அவர்தான் இந்திய அணிக்கு பெரிய ஊக்கம்.. நாட்டுக்கே ரொம்ப நல்ல விஷயம் – ரவீந்திர ஜடேஜா பேட்டி

அவரின் வேகம் சற்று குறைந்து விட்டது. புவனேஸ்வர் குமார் மணிக்கு 132 கிலோமீட்டர் வேகத்தில் வீசினாலும், அதில் அவர் கூர்மையாக இருக்கிறார். ஆனால் சமி அந்த வேகத்தில் வீசினாலும் அது அவரது சிறந்த பந்துவீச்சு கிடையாது. அவர் சராசரியாக 137 முதல் 138 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர். சமி தற்போது அவ்வளவு சிறப்பாக பந்து வீசவில்லை. அடில் ரஷீத் அவரது ஓவரில் மூன்று பௌண்டரிகள் அடித்தார். கேப்டன் அவரை பத்து ஓவர்கள் வீச சொல்லவில்லை. அவர் ஓவர்களை முழுமையாக வில்லை என்றால் இன்னும் தயாராகவில்லை என்று அர்த்தம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -