இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நேற்றைய போட்டி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 28 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 59 ரன்கள் குவித்தார். காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து பல போட்டிகளில் விலகி இருந்தாலும் நேற்று அவருடைய ஆட்டம் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதற்குப் பிறகு பேட்டிங் செய்த தென்னாபிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 12.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த சூழ்நிலையில் இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான இர்ஃபான் பதான் சில முக்கிய கருத்துக்கள் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்த விதத்தை பார்த்தால் அவர் காயத்தில் இருந்து மீண்டு வந்தது போல தெரியவில்லை. முழு ஃபார்மில் இருந்தார். 75 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை கட்டுப்பாட்டில் இருந்தார். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக உடனடியாக பெரிய ஷாட்களை விளையாடினார். பாண்டியாவின் பலம் என்னவென்றால் லெந்த் நிரம்பியிருந்தால் அவர் பெரிய ஷாட்களுக்கு செல்வார். 150 ரன்கள் இந்திய அணி அடித்து இருந்தாலும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக கட்டுப்பாட்டுடன் செயல்பட்டார்.
இதையும் படிங்க:நானும் கில்லும் ரன் அடிக்கலனா என்ன.. 4 பேர் வேலை செஞ்சாலே ஒரு போட்டிக்கு போகும் – சூரியகுமார் யாதவ் பேட்டி
அவரது இன்னிங்ஸில் அதுதான் பெரிய வித்தியாசம்” என்று இர்பான் பதான் பேசி இருந்தார். மேலும் நேற்றைய போட்டியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் விரைவாக ஆட்டம் இழந்து வெளியேறியது குறித்தும் விமர்சித்து இருந்தார். “ஆரம்பத்தில் சூரியகுமார் யாதவ் பந்தை ஆப் ஸ்டம்பிலிருந்து லெக் ஸ்டம்பிற்கு விளையாடினார். அதை அவர் நேராக விளையாட பார்க்க வேண்டும். அதற்கு நேரம் கொடுக்க பார்க்க வேண்டும் ஆனால் அவர் லெக் சைடில் விளையாட முயற்சித்தார். அவரது பலம் லெக் சைடு தான் இருப்பினும் நேராக விளையாட முயற்சிக்க வேண்டும் அப்போதுதான் அவருக்கு ரன்கள் வரும்” என்று பேசி இருக்கிறார்.






