ஐபிஎல் 2025.. நெஹ்ரா சாதாரண ஆள் இல்ல.. இது தெரிஞ்சுதான் பாஸ்ட் பவுலர்ஸ் அதிகமா வாங்குனாரு – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

0
192

18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்து அணியை கட்டமைத்தது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குஜராத் டைட்டன்ஸ் அணி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

18வது ஐபிஎல் சீசன்

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வெற்றிகரமாக இந்தியாவில் நடைபெற்று வருவதை தொடர்ந்து இதுவரை 17 சீசன்கள் நடைபெற்ற முடிந்துள்ளன. அடுத்த சீசன் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மெகா ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக துபாயில் உள்ள ஜட்டாவில் நடைபெற்றது. இதில் குறிப்பாக குஜராத் அணி அந்த ஏலத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாங்கியது.

முன்னணி சுழற் பந்துவீச்சாளரான ரஷித் கான் 18 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட, ககிஷோ ரபாடா 10.75 கோடி ரூபாய்க்கும், முகமது சிராஜ் 12.25 கோடி ரூபாய்க்கும், பிரஷித் கிருஷ்ணா 9.50 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் குஜராத் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெக்ரா வாங்கியது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வாங்கப்பட்டதன் நோக்கம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

குஜராத் அணியின் திட்டம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “குஜராத் அணி அதன் சொந்த மண்ணில் பெரும்பாலான போட்டிகள் விளையாட உள்ளதால் வேகப்பந்துவீச்சாளர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அதாவது இரவு நேரங்களில் வெளிச்சத்திற்கு கீழ் வேகப்பந்து வீச்சின் நகர்வு முக்கியத்துவம் பெறும். அதனால் அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து இவர்களை வாங்கினார்கள். காகிசோ ரபாடா மற்றும் ஜெரால்ட் கோட்ஸியைத் தவிர, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா, அர்ஷத் கான், குர்னூர் ப்ரார் மற்றும் குல்வந்த் கெஜ்ரோலியா போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:2011 உலக கோப்பை.. தோனி செஞ்ச விஷயம் மர்மமா இருக்கு.. அது எனக்கு சுத்தமா புரியல – ஹர்பஜன் சிங் கேள்வி

இதன் காரணமாகத்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் வாங்கப்பட்டனர். எம்ஆர்எப் பேஸ் அகாடமி போல நெகரா அகாடமி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் சிறப்பானவர்கள். குறிப்பாக கோட்சே சிறந்த வீரராக இருந்தாலும் அவர் உட்கார வைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் இருக்கலாம்” என்று கூறி இருக்கிறார். குஜராத் அணி ஐபிஎல் தொடரின் அறிமுக ஆண்டிலேயே கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -