இந்திய கிரிக்கெட்

பும்ரா மாதிரி ரோஹித் அவருக்கு சான்ஸ் குடுத்திருந்தா.. நித்திஷ் ரெட்டி மாதிரி வந்துருப்பார் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்திருந்தாலும் இந்திய இளம் வீரர்கள் தங்களது சிறப்பான செயல் திறனை வெளி காட்டினார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா மற்றொரு இளம் இந்திய வீரருக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

திறமையை வெளிப்படுத்திய இளம்
வீரர்கள்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். அதேபோல மற்றொரு இந்திய இளம் வீரரான நிதிஷ்குமார் ரெட்டி தனது அறிமுக தொடரில் சதம் அடித்து தனது திறமையை உலகிற்கு காட்டினார். ஆனால் சீனியர் வீரர்களின் நிலையற்ற ஆட்டத்தால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்து மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

மேலும் கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான துருவ் ஜூரேல் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவர் இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகளில் 40.40 சராசரியில் 202 ரன்கள் குவித்திருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா அவருக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸில் 11 ரன் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 1 ரன் மட்டுமே எடுத்தார். பின்னர் ரோகித் சர்மா கேப்டன் ஆன பிறகு அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தால் நிதீஷ் குமார் ரெட்டி போன்ற சிறப்பாக விளையாடியிருப்பார் என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “துருவ் ஜூரேல் பற்றி கூறுவது என்னவென்றால் இந்திய அணி ஏற்கனவே அவர் மீது முதலீடு செய்ய துவங்கி விட்டது. அவர் உண்மையில் ஒரு தரமான வீரர் விக்கெட் கீப்பராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல பேட்ஸ்மேன் ஆகவும் அவரால் விளையாட முடியும். அவருக்கு தற்போது 23 வயது தான் ஆகிறது. இந்திய ஏ அணிக்காக அனைவரும் விளையாடிய போது அவர் எப்படி போராடினார் என்பதை நாம் பார்த்தோம். ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் அவ்வாறு விளையாடுவது என்பது சாதாரண காரியம் அல்ல.

இதையும் படிங்க:பிசிசிஐக்கு பதிலடி கொடுத்த பிசிபி.. இனி இந்தியாவை மிஸ் செய்யப் போகிறோம் – பாக் பகார் ஜமான் பேட்டி

அவர் பெர்த் டெஸ்ட் போட்டிக்கு பிறகு அனைத்து போட்டிகளிலும் விளையாடி இருந்தால் சிறப்பாக விளையாடி இருப்பார் என்று நான் நம்புகிறேன். நிதீஷ் குமார் ரெட்டியை போல அவருக்கு போராட்ட குணம் இருக்கிறது. துருவ் ஜூரேலுக்கு ஏதோ ஒரு போராட்ட குணம் இருக்கிறது, நிச்சயமாக அவர் வாய்ப்பு கொடுத்திருந்தால் சிறப்பாக விளையாடியிருப்பார்” என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். எனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை இந்திய அணி வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

- Advertisement -
Published by

Recent Posts