இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஒரு வருடத்திற்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில் அவரை வைத்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் ஒரு தந்திரத்தை தவற விட்டு விட்டதாக ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 171 ரன்கள் எடுத்தது. உடம்பு இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நேற்றைய போட்டியை வென்று இருந்தால் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருக்கும்.
முகமது ஷமியின் மறுவருகை
2023 இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் காலில் காயமடைந்த முகமது ஷமி ஒரு வருடத்திற்கு மேல் கழித்து சர்வதேச கிரிக்கெட்டில் நேற்று களம் இறங்கினார். நேற்று பவர் பிளேவில் அவர் இரண்டு ஓவர்கள் பந்து வீசினார். மேலும் இறுதிக்கட்ட ஓவரில் ஒரே ஓவர் மட்டும் வீசினார்.
இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 17 ஓவர்கள் முடிவடைந்து இருந்த நிலையில், மீதமருந்த மூன்று ஓவரில் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளரான ஹர்திக் பாண்டியாவுக்கு இரண்டு ஓவர்கள் கொடுத்தார். அதே சமயத்தில் பிரதான வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமிக்கு கடைசி கட்டத்தில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தார். அந்த நேரத்தில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தந்திரத்தை தவறவிட்ட சூரியகுமார் யாதவ்
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ஒரு வருடம் கழித்து முகமது ஷமி சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பினார். அவர் வீசிய முதல் ஓவரில் பந்தின் தையல் வழக்கம் போல் நேராக இல்லை. கொஞ்சம் சாய்ந்திருந்தது. மேலும் அவர் கொஞ்சம் மெதுவாகவும் ஓடி வந்தார். வேகமும் குறைவாக இருந்தது. ஆனால் இரண்டாவது ஓவரில் பந்தை நல்ல முறையில் ஸ்விங் செய்தார். மேலும் வேகமாக ஓடியும் வேகமாகவும் பந்து வீசினார். பந்தின் தையலும் நேராக இருந்தது”
இதையும் படிங்க : வருண் சக்கரவர்த்தி கிட்ட தப்பிக்கிறது கஷ்டம்.. அதுக்கு முக்கியமான காரணம் இதுதான் – மஞ்ச்ரேக்கர் விளக்கம்
“இப்படியான நிலையில் இங்கிலாந்து அணி கடைசி கட்டத்தில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து இருந்த பொழுது, அந்த சூழ்நிலையில் முகமது ஷமிக்கு மீதம் இருந்த இரண்டு ஓவர்களையும் வீச கொடுத்திருக்க வேண்டும். அது அவருக்கு அந்த சூழ்நிலையில் எளிதாகவே இருந்திருக்கும். மேலும் நீண்ட நாட்கள் கழித்து திரும்பி வந்தவருக்கு அது தேவை. வண்டி எஞ்சின் சூடாக சூடாகத்தான் வேகமாக ஓட முடியும். எனவே நேற்று அவருக்கு நான்கு ஓவர்கள் தராமல் சூரியகுமார் ஒரு தந்திரத்தை தவற விட்டுவிட்டார்” என்று கூறியிருக்கிறார்.