சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் தற்போது சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து விளையாடாதது மர்மமாய் இருப்பதாக இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் நடுவில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கையில் காயம் அடைந்ததால் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். அதே சமயத்தில் தற்போது இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருக்கிறார். இதுதான் தற்போது பல சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விஷயம் மர்மமா இருக்கு
இதுகுறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “ருதுராஜ் காயம் குறித்த உண்மை என்ன? காயம் அடைந்த ஆரம்பத்தில் அதன் காரணமாக முழு ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறுவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் இங்கிலாந்துக்கு செல்ல இருக்கிறார். இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடருக்கு அவர் முழுமையாக கிடைக்கப் போகிறார். அவர் இவ்வளவு விரைவாக உடல் தகுதியை பெற்று விட்டார் என்றால், அவர் எப்பொழுது உடல் தகுதி பெற்றார்?”
“ஒருவேளை அவர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை என்றால் அவர் எப்படி இந்திய ஏ அணிக்கு கிடைப்பார்? இல்லை அவர் உடல் தகுதியுடன்தான் இருக்கிறார் என்றால் தற்போது சிஎஸ்கே அணிக்கு ஏன் விளையாடவில்லை? இது எனக்கு ஒரு மர்மமாகவே இருக்கிறது. இது குறித்து எந்த தெளிவும் இல்லை. உண்மையில் அங்கு என்ன நடக்கிறது என்று நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்”
தோனி விஷயம் சரியில்லை
“தோனி இந்த அணியை தனது கைகளால் உருவாக்கி இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே சிஎஸ்கே அணிக்கு சீசன் சரியாக செல்லவில்லை. ஒரு சிறந்த கேப்டன் ஆன தோனி விளையாட வேண்டும் என்றால் அவர் கேப்டனாகவே விளையாட வேண்டும். தோனி தனது கேப்டன் பொறுப்பை இன்னொருவரிடம் ஒப்படைத்ததற்கான காரணம் என்ன? டோனி இல்லாத போது அணியை நிர்வகிக்க ஒருவர் தேவை என்று நினைத்தார்கள்”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. தோனி அடுத்த சீசனும் விளையாடுவார்.. ஏன் தெரியுமா?
“ஆரம்பத்தில் இதற்காக ஜடேஜா இடம் சென்றார்கள் அது சரிவரவில்லை. ருதுராஜிடம் சென்ற பொழுது இரண்டு வருடமாக சரியில்லை. இதுவெல்லாம் தோனி வெளியே போகிறார் என்றால் செய்திருக்கலாம். ஆனால் அவர் வெளியே போகாத போது எதற்காக கேப்டன் பொறுப்பை வெளியில் தர வேண்டும்? வரலாற்றில் சிறந்த கேப்டனை நீங்கள் பொறுப்பில் இருந்து நீக்க கேட்கிறீர்கள் என்பது எனக்கு வினோதமாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.