பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்த மாதத்தில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிர்ணயத்திற்கும் டிக்கெட் விலை மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.
பாகிஸ்தான் அணி உள்நாட்டில் 16 மாதங்கள் கழித்து டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் அணிக்கு கேப்டன் பொறுப்பில் புதிய கேப்டனாக ஷான் மசூத் தொடர்கிறார். பாபர் அசாமுக்கு மீண்டும் டெஸ்ட் கேப்டன் பதவி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் இந்த மாதம் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி கராச்சி மைதானத்தில் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது.
இந்த டெஸ்ட் போட்டிக்கான அதிகபட்ச ஒரு நாள் டிக்கெட் விலை இந்திய மதிப்பில் 83.333 ரூபாய். இது பாகிஸ்தான் மதிப்பில் 250 ரூபாய் வருகிறது. இந்த மதிப்பில் வாங்கப்படும் ஒருநாள் டிக்கெட் விலைக்கு விலை உயர்ந்த கேலரியில் சகல வசதிகளோடு பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல இந்த டெஸ்ட் போட்டிக்கு குறைந்தபட்ச ஒருநாள் டிக்கெட் விலை இந்திய மதிப்பில் வெறும் 15 ரூபாய்தான். ஐந்து நாட்களுக்கும் சேர்த்து வாங்கினால் மொத்தம் 72 ரூபாய்தான் வருகிறது. இதிலும் மூன்று ரூபாய் தள்ளுபடி வேறு கொடுக்கிறார்கள். இந்திய மதிப்பில் 72 ரூபாய் என்பது பாகிஸ்தான் மதிப்பில் 215ரூபாய்.
இதையும் படிங்க : நீரஜ் சச்சின் இல்லை.. இந்தியா இதுவரை உருவாக்கிய தலைசிறந்த விளையாட்டு வீரர் இவர்தான்.. சுனில் கவாஸ்கர் பேட்டி
இந்த ஆண்டு பிஎஸ்எல் டி20 லீக் தொடரின் எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டிக்கு கூட பெரிய அளவில் ரசிகர்கள் திரண்டு வரவில்லை. மேலும் தற்பொழுது பாபர் அசாம் கேப்டனாகவும் இல்லை. மேலும் ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுக்கு எதிரான போட்டியும் இல்லை. இதன் காரணமாக ரசிகர்கள் மைதானத்திற்கு வர மாட்டார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பயப்படுகிறது. இதன் காரணமாகவே இவ்வளவு குறைவான தொகைக்கு டிக்கெட் விலையை நிர்ணயித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!






