நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது t20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 15.2 ஓவர்களில் 209 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து வரலாற்று வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கேப்டன் சூரியகுமார் யாதவ் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 208 ரன்கள் குவிக்க, அதற்குப் பிறகு களம் இறங்கிய இந்திய அணி சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் விரைவில் வெளியேறியதால் இந்திய அணி திடீரென சிக்கலில் மாட்டியது. அதற்குப் பிறகு கேப்டன் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்த இசான் கிஷன் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சிறப்பாக பயன்படுத்தி விளையாடினார்.
மறுமுனையில் கேப்டன் சூர்யா அதிரடியாக விளையாட வாய்ப்பு கிடைத்தும் களத்தில் தான் நிற்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து இஷானை அதிரடியாக விளையாட வைத்தார். இஷான் கிஷான் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க அதற்குப் பிறகு சூர்யா 82 ரன்கள் உடன் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு உதவி புரிந்தார்.
இந்த சூழ்நிலையில் சூர்யா குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்போது “நீங்கள் ஆடுகளத்தில் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும், எனக்கு முதலில் ரன்கள் வேண்டும் என்கிற தேவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனால சூர்யா மைதானத்தில் அதிக ஸ்ட்ரோக் மற்றும் அதிக ரிஸ்க் எடுக்கவில்லை. அதிர்ஷ்டவசமாக நீங்கள் உங்களுக்கு போதுமான நேரத்தை கொடுத்து சூர்யா முயற்சி பண்ணினார். முதல் 10 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
மறுமுனையில் இஷான் அதிரடியா விளையாட, சூர்யா தனது ஈகோவை உள்ளே கொண்டு வரவில்லை. நியூசிலாந்து அணியில் ஜாக் ஃபோல்க்ஸ் பந்து வீசும் போது இசானுக்கு பதிலாக சூர்யா விளையாடியிருந்தால் 35 முதல் 37 ரன்கள் வரை எடுத்திருப்பார் என்று நினைக்கிறேன். இருப்பினும் இஷான் கிஷான் அவருக்கு எதிராக 20 ரன்கள் எடுத்தார். சில நேரங்களில் உங்களுக்கு அதிர்ஷ்டம் தேவை இடும்போது நீங்கள் நீண்ட நேரம் களத்தில் இருப்பது அவசியம் இதைத்தான் சூர்யா செய்தார்” என்று பேசி இருக்கிறார்.