ரன்கள் அடிக்காதது விஷயம் இல்ல.. ஆனா சாம்சனின் இந்த விஷயம்தான் பெரிய கவலையா இருக்குது – ஆகாஷ் சோப்ரா வருத்தம்

0
37

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மிகவும் மோசமாக விளையாடிய தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் குறித்து ஆகாஷ் சூப்பரா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி இந்தத் தொடரில் நான்கு போட்டிகள் வெற்றி பெற்றிருந்தாலும் தொடக்க ஆட்டக்கார சஞ்சு சாம்சனின் பேட்டிங் மிகவும் மந்தமான முறையில் இருந்தது. நேற்று அவரது சொந்த மாநிலமான கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் 6 பந்துகளில் அவர் 6 ரன் எடுத்த நிலையில் லாக்கி பெர்குசன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றால் இந்த ஐந்து போட்டிகளிலும் சாம்சன், கிரீசுக்குள் நகர்ந்து கால்களை பயன்படுத்தி விளையாடாமல் நம்பிக்கையற்ற முறையில் விளையாடி ஆட்டம் இழந்ததை பல முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இது குறித்து ஆகாஷ் சோப்ரா சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “இப்போது இது கடந்த 12 மாதங்களில் சுமார் ஒரு இரண்டு முறை நினைக்கிறேன். இவை அனைத்தும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து தொடங்கியது. ஆட்டத்தின் குறுகிய வடிவத்தில் ஒரு உயர் தர பேட்டர் ஒரு பேட்டர்னை உருவாக்குவதை காணலாம். அவர் இதே பாணியில் சுமார் ஐந்து முறை ஆட்டம் இழந்தார். ஷார்ட் பால் டீப்பில் கேட்ச் ஆனது. இது சுமார் ஐந்து முறை நடந்திருக்கிறது.

இங்கேயும் வேகத்துடன் ஒப்பிடும்போது அவர் அவுட் ஆகும் இடத்தை பார்த்தால் ஒரே மாதிரியாக நடந்திருக்கிறது. பந்து வீசப்படுவதற்கு முன்பே நீங்கள் கிரீஸுக்குள் ஆழமாகச் செல்கிறீர்கள். நீங்கள் பந்தை விளையாட முயற்சிக்கிறீர்கள், ஆனால் முன் கால்கள் எங்கும் செயல்படுவது கிடையாது. ரன்கள் இல்லாதத விட அவர் அந்த ஐந்து இன்னிங்ஸ்களிலும் எப்படி அவுட் ஆனா என்பதே இதில் முக்கியமாக இருக்கிறது” என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

- Advertisement -