கம்பீர் என்ன செய்யப் போறீங்க.. 5 போட்டி மட்டுமே இருக்கு.. எல்லாம் அவ்வளவுதானா? – ஆகாஷ் சோப்ரா கவலை

0
152
Akash

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்பது இன்னும் உறுதியாகவில்லை. அதே சமயத்தில் இந்திய அணி ஐசிசி தொடரை புறக்கணிப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இந்த நிலையில் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் சில விஷயங்கள் கவலை அளிப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இலங்கையை அணிக்கு எதிராக அந்த நாட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாக சூரியகுமார் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இலங்கை அணி நிர்ணயித்த 231 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி 10 விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டுமே எடுத்து போட்டியை டை செய்தது. கடைசி கட்டத்தில் போட்டியை வெகு எளிதாக வெல்லும் இடத்திலிருந்து டை ஆனது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கிறது.

மேலும் அடுத்த ஆண்டு சாம்பியன் டிராபி தொடருக்கு முன்பாக இலங்கை அணிக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் என மொத்தம் ஐந்து ஒருநாள் போட்டிகள் மட்டுமே இந்திய அணிக்கு இருக்கிறது. எனவே இவ்வளவு குறைவான போட்டிகளை வைத்துக்கொண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக இந்திய அணி பெரிதாக எதையும் செய்து விட முடியாது என ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும்பொழுது ” இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தற்பொழுது நிறைய யோசிக்க வேண்டிய இடத்தில் இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் என மொத்தம் ஐந்து போட்டிகள் மட்டுமே ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணிக்கு இருக்கிறது. எனவே இந்திய அணி பெரிதாக எதையும் செய்ய முடியாது.

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸை ஜெயிக்க முடியும்னு.. எங்களுக்கு நல்லாவே தெரியும் – ரபாடா வெளிப்படையான சவால்

இந்தியா முதலில் தாங்கள் எப்படி விளையாடுகிறோம்? என்பது குறித்து சிந்திக்க வேண்டும். தற்போது இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டையில் முடிந்திருக்கிறது. மேலும் தொடரும் டையில் முடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனவே இந்திய அணி அடுத்து இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்ற முதலில் பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -