சஞ்சு சாம்சனை பேட்டிங் வரிசையில் கீழே விளையாட வைப்பதில் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயர் தானாகவே இந்திய அணிக்கு வந்து விடுவார் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சனம் செய்திருக்கிறார்.
நேற்று யுஏஇ அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது இடத்தில் விளையாடும் திலக் வர்மாவுக்கும் வாய்ப்பு கொடுத்து, மேல் வரிசையில் விளையாட வேண்டிய சஞ்சு சாம்சனுக்கும் வாய்ப்பு கொடுத்தது தவறான முடிவு என கிரிக்கெட் வல்லுனர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சஞ்சு சாம்சனால் முடியுமா?
சமீபத்தில் நடந்து முடிந்த கேரள டி20 லீக்கில் சஞ்சு சாம்சன் ஆசியக் கோப்பையில் பேட்டிங் வரிசையில் கீழே விளையாட வேண்டும் என்பதற்காக ஆறாவதாக களம் இறங்கி அடித்து விளையாட சிரமப்பட்டு ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து உடனடியாக முடிவை மாற்றிக் கொண்டு துவக்க ஆட்டக்காரராக மீண்டும் வந்தார்.
இந்த நிலையில் அவர் மூன்று அதிரடியான அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்தை அடித்து துவக்க இடத்தில் தன்னுடைய திறமையை நிரூபித்தார். ஆனால் நேற்று இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் கில் இருவரும் வந்தார்கள். மேலும் மூன்றாவது இடத்திற்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் சூரியகுமார் யாதவ் வந்தார். எனவே சஞ்சு சாம்சன் கீழ் வரிசையில் விளையாடுவது உறுதியாகிவிட்டது.
ஸ்ரேயாஸ் ஐயர் வரப்போகிறார்
இதுகுறித்து பேசி உள்ள கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் “சஞ்சுவை பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் விளையாட வைக்க நினைப்பதின் மூலமாக ஸ்ரேயாஸ் ஐயரை தானாக இந்திய அணிக்குள் கொண்டு வரப் போகிறார்கள். அவர் ஐந்தாவது இடத்தில் அதிகம் பேட்டிங் செய்தது கிடையாது. அவரால் அங்கு சிறப்பாக விளையாட முடியாது. இது அவரது நம்பிக்கையை அழித்துவிடும். சஞ்சு வெறும் மூன்று போட்டிகளில் அந்த இடத்தில் விளையாடினால் அதே இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயர் வந்துவிடுவார்”
இதையும் படிங்க: ஹர்திக், சிவம் துபேவை நம்ப முடியாது.. இந்திய அணி பவுலிங்கில் இது மிகப்பெரிய குறை.. இர்பான் பதான் கருத்து
“மேலும் மிடில் ஆர்டரில் சஞ்சுவை பயன்படுத்தப் போகிறார்களா? இல்லை அவரை ஃபினிஷர் ஆக பயன்படுத்த போகிறார்களா? தற்போது ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே இருக்கிறார்கள். எனவே சஞ்சு ஐந்தாவது இடத்தில்தான் விளையாடுவார். இந்த இடத்தில் விளையாடி அவரால் டெலிவரி செய்ய முடியுமா? ஜிதேஷ் சர்மாவை தாண்டி சஞ்சுவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த டி20 உலகக் என்ன நடக்கப் போகிறது?” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.






