நீங்க நம்ப மாட்டீங்க.. அடுத்த கேப்டன் கில் கிடையாது.. இந்த ரெண்டு பசங்கதான் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

0
68
Gill

தற்போது இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் அடுத்த இந்திய கேப்டனுக்கான எண்ணத்தில் கிடையாது என ஆகாஷ் சோப்ரா அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

கடந்த வருடம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்ட இந்திய அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடருக்கு யாரும் துணைக் கேப்டனாக அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக பும்ரா துணை கேப்டனாக கொண்டுவரப்பட்டார்.

- Advertisement -

தடுமாறும் கில் கிரிக்கெட் வாழ்க்கை

மேலும் இந்திய அணி டெஸ்ட் மற்றும் அருகில் உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கவனம் செலுத்துகின்ற காரணத்தினால் மேற்கொண்டு கில்லை டி20 வடிவத்தில் விளையாட வைக்கவில்லை. இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுத்தது. அதை பயன்படுத்திக் கொண்ட அவர் அதிரடியாக 7 போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்து விட்டார்.

இதன் காரணமாக சஞ்சு சாம்சன் இந்திய டி20 கிரிக்கெட் வடிவத்தில் தற்போது துவக்க வீரருக்கான இடத்தை உறுதி செய்திருக்கிறார். இன்னொரு வீரராக நிச்சயம் ஜெய்ஸ்வால் வருவார். இப்படியான காரணங்களால் கில் இந்திய டி20 அணியில் இடத்தை இழக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் அவருடைய பேட்டிங் ஃபார்ம் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்திலும் ஆஸ்திரேலியா தொடரில் மிகவும் மோசமாக இருந்தது. இத்துடன் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ஜெய்ஸ்வால் வந்தால் அங்கும் கில்லின் இடம் ஆபத்தில் இருக்கிறது. தற்போது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை குழப்பமாக செல்கிறது.

- Advertisement -

இந்த இருவர்தான் அடுத்த கேப்டன்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ரிஷப் பண்ட் அல்லது ஜெய்ஸ்வால் இவர்கள் இருவரில் அடுத்த கேப்டனாக யார் வர முடியும்? என்பது ஒரு அழகான கேள்வி. ஏனென்றால் அடுத்த சில மாதங்களுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இருப்பேன் என்று கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து நீங்கள் உங்கள் அணியை நிர்வகிப்பதற்கு ஒரு புதிய கேப்டனை கண்டறிய வேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள்”

இதையும் படிங்க : மக்கள் இப்படி கேட்கும் போதே.. வெளிய போறது எனக்கு நல்லது.. இல்லனா ரொம்ப சிக்கல்.. ஓய்வு குறித்து அஸ்வின் விளக்கம்

“இதற்கு முன்பாக எல்லாம் நல்லா சென்று கொண்டிருந்த பொழுது கில்லுக்கு துணைக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த பொறுப்பில் இருந்து கில் நீக்கப்பட்டார். அவருக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்ட பிறகு அவருடைய திறமை டி20 கிரிக்கெட் வடிவத்தில் கூட வெளிப்படவில்லை. இதன் காரணமாக இப்பொழுது அவர் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் கிடையாது. ரிஷப் பண்ட் அல்லது ஜெய்ஸ்வால் இருவரில் ஒருவர்தான் அடுத்த கேப்டனாக வர முடியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -