இந்திய கிரிக்கெட்

சஞ்சு சாம்சன் தப்பு செய்கிறார்.. இந்த காரணத்தால் அவரை செலக்ட் பண்ணல – ஆகாஷ் சோப்ரா பேச்சு

நடக்க இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாமல் போனதற்கான காரணம் அவர்தான் என ஆகாஷ் சோப்ரா குற்றம் சாட்சி பேசியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியில் முதல் விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுல் மற்றும் இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். அப்போது நல்ல பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை.

சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாத பின்னணி

இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” சஞ்சு சாம்சங் எப்பொழுதுமே விவாதத்துக்கு உரிய ஒருவராக இருந்து வருகிறார். அவர் மொத்தம் 16 ஒருநாள் போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 56 ரன்கள் ஆவரேஜ் வைத்திருக்கிறார். இது மிகவும் சிறப்பான ஒன்று. இதில் ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் இருக்கின்றன. அவர் நல்ல அணிகளுக்கு எதிராகவும் விளையாடியிருக்கிறார். கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் 2023 டிசம்பரில் சதம் அடித்தார்”

“இவை எல்லாமே சஞ்சு சாம்சனுக்கு சிறப்பான ஒன்றாக இருந்து வந்திருக்கின்றன. இப்படி இருந்த நிலையில் இந்த முறை அவர் விஜய் ஹசாரே டிராபியில் விளையாடவில்லை. அவர் கேரள பயிற்சி முகாமுக்கு சென்று இருக்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். அவர் இந்த தொடரில் விளையாடாதது அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது என்று சொல்வேன்”

- Advertisement -

கடந்த கால வரலாறு

“கடந்த முறை அவர் விஜய் ஹசாரே ட்ராபில் ஏழு இன்னிங்ஸ்களில் 293 ரன்கள் எடுத்தார். இது மிகவும் மோசமானது ஒன்றும் கிடையாது. இருந்தபோதிலும் அவர் கடந்த முறை ரஞ்சி கிரிக்கெட் விளையாடவில்லை. இந்த முறை ரஞ்சி தொடரில் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்”

இதையும் படிங்க : வான்கடேவில் மீண்டும் 2024 சம்பவம் இருக்கு.. எல்லா முயற்சியும் பண்ணுவேன் – ரோகித் சர்மா சவால்

“அவர் கடைசியாக ரஞ்சி தொடரில் விளையாடிய பொழுது கேரள அணிக்காக அந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் அவரது பெயர் பத்தாவது இடத்தில்தான் இருந்தது. அவர் நான்கு போட்டிகளில் ஆறு இன்னிங்ஸ் விளையாடி 177 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதற்கு முந்தைய சீசனில் ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்கள் உடன் 284 ரன்கள் குவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts