சாம்சனுக்கு சோதனை தீரவில்லை.. திலக் வர்மாவால் இப்பதான் பெரிய பிரச்சனையே ஆரம்பிச்சிருக்கு – இந்திய முன்னாள் வீரர் கருத்து

0
13
Sanju

தற்போதும் இந்திய டி20 அணி பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சனுக்கு இடம் நிரந்தரமானது இல்லை எனவும், அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

தற்போது இந்திய அணியில் திலக் வர்மா காயத்தின் காரணமாக இடம் பெறவில்லை. எனவே டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் இரண்டாவது விக்கெட் கீப்பர் இஷான் கிஷானுக்கு விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இதுதான் சஞ்சு சாம்சங் பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சஞ்சு சாம்சனுக்கு பிரச்சனை

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” தற்போது இந்திய அணியில் ஏதாவது சரி செய்ய வேண்டிய பிரச்சனைகள் இருக்கிறதா என்றால் நான் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷான் பற்றி சொல்வேன். இவர்களை வைத்து ஒரு உரையாடல் வெறுமனே நடக்காது. சாம்சன் பெரிய அளவில் ரன்கள் குவித்து வந்திருந்தால் இப்படி எல்லாம் தோன்றாது. இப்போது அவர் குறித்து பூதக்கண்ணாடி வைத்து பார்க்க வேண்டியது இருக்கிறது.

“தற்போது ஒரே பிளேயிங் லெவனில் இரண்டு விக்கெட் கீப்பர்களும் விளையாடுகிறார்கள். இந்த நிலையில் சஞ்சு சாம்சன் ரன் எடுக்காமல் இஷான் கிஷான் ரன்கள் எடுத்தால் அது சஞ்சு சாம்சனுக்கு பிரச்சனையை உண்டாக்கிவிடும். நாளை t20 உலக கோப்பையில் சாம்சனுக்கு பதிலாக இஷான் கிஷானை விளையாட வைக்கலாம் என்று பேச்சுகள் உருவாகும்”

- Advertisement -

சூரியகுமார் மாற வேண்டும்

“மேலும் சூரியகுமார் யாதவ் அரை சதம் அல்லது சதம் அடித்தால் மட்டுமே அவரது பேட்டிங் ஃபார்ம் எப்படி இருக்கிறது என்பது குறித்து கூற முடியும். ஏனென்றால் நீங்கள் அவரிடம் இருந்து இன்னும் சில ரன்கள் வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். நீங்கள் மைதானத்தில் அதிக நேரம் நின்று விளையாடவில்லை என்றால் அது உங்கள் பார்ம் பற்றிய கேள்வியை உண்டாக்கும்”

இதையும் படிங்க: வருண் ஒரு மாயாஜாலகாரர்.. அவர் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும் தான் – கவாஸ்கர் புகழ்ச்சி

“ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இந்த பிரச்சனை இருந்தது. அவர்கள் களத்தில் அதிக நேரம் என்று அதிக பந்துகளை சந்தித்ததின் மூலமாக பார்முக்கு திரும்பி வந்தார்கள். எனவே சூரியகுமார் யாதவ் அதிக பந்துகள் விளையாடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒரு முறை 30 ரன்னை தாண்டி அடித்து விட்டு அடுத்த இரண்டு இன்னிங்ஸ் ரன் இல்லாமல் போனால் மீண்டும் பார்ம் பற்றிய பிரச்சனை உண்டாகிவிடும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -