சாம்சன் அபிஷேக்.. உங்களுக்கு ருதுராஜ் தென் ஆப்பிரிக்கா ஞாபகத்துல இருக்கா?.. இல்லனா அவுட் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
95
Aakash

தற்போது இந்திய டி20 அணியில் தொடக்க இடத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இது குறித்து ஆகாஷ் சோப்ரா முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல முறையில் ஆரம்பித்து பின்பு மிகவும் மலிவான முறையில் தங்கள் விக்கெட்டை கொடுத்தார்கள். முதல் விக்கெட் மூன்று ஓவர்களுக்கு உள்ளாகவே விழுந்தது. தற்பொழுது இது பெரிய விமர்சனமாக உருவெடுத்திருக்கிறது.

- Advertisement -

ருதுராஜ் மற்றும் தென் ஆப்பிரிக்கா

இந்திய அணி அடுத்த மாதம் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு தென் ஆப்பிரிக்கா செல்கிறது. அதே சமயத்தில் இன்னொரு அணி டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா செல்கிறது. எனவே தென் ஆப்ரிக்க டி20 தொடரில் கில் மற்றும் ஜெயஸ்வால் இருவரும் விளையாட மாட்டார்கள் என்பது உறுதி.

எனவே சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், இவர்களே தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலும் துவக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள். ஒருவேளை இவர்கள் நன்றாக விளையாடாவிட்டால் வெளியே இருக்கும் ருதுராஜ் நிச்சயம் உள்ளே கொண்டு வரப்படுவார்.

- Advertisement -

இருவருமே வாய்ப்பை பயன்படுத்தவில்லை

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சாம்சன் மற்றும் அபிஷேக் இருவருமே தங்களது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. முதல் போட்டியில் இருவருமே சிறப்பாக ஆரம்பித்தார்கள் அபிஷேக் ஷர்மா ரன் அவுட் ஆனார் சாம்சன் அடிக்க சென்று ஆட்டம் இழந்தார். இரண்டாவது போட்டியில் நல்ல டச் தெரிந்தாலும் இருவரும் மலிவான முறையில் விக்கெட்டை கொடுத்தார்கள்”

இதையும் படிங்க : நாங்க யாருக்கும் வாய்ப்பு தரல.. அந்த பையன் உருவாக்கினார்.. கம்பீர் திட்டம் இதுதான் – இந்திய துணை பயிற்சியாளர் பேச்சு

“இந்திய அணி அடுத்து தென் ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. எனவே அங்கு கொஞ்சம் நிலைமைகள் வித்தியாசமாக இருக்கும். அங்கு சென்று ரன் அடிக்கலாம் என்று நினைக்க முடியாது. இங்கு நல்ல முறையில் ரன் எடுத்ததால் அங்கு செல்ல வேண்டும். இவர்கள் இருவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால், தென் ஆப்பிரிக்க தொடரில் ருதுராஜ் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -