நாங்க யாருக்கும் வாய்ப்பு தரல.. அந்த பையன் உருவாக்கினார்.. கம்பீர் திட்டம் இதுதான் – இந்திய துணை பயிற்சியாளர் பேச்சு

0
639
Ryan

இந்திய அணியில் தாங்கள் யாருக்கும் வாய்ப்புகள் வழங்குவதில்லை எனவும் வீரர்களே தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள் எனவும் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் நெதர்லாந்தின் ரியான் டென் டஸ்கேட் கூறியிருக்கிறார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி இருவரும் அறிமுகம் செய்யப்பட்டார்கள். இன்றைய போட்டியில் ஹர்ஷித் ராணாவும் அறிமுகம் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

2026 ஆம் ஆண்டுக்கான திட்டங்கள்

இந்தியா மற்றும் இலங்கையில் 2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. மேலும் இதற்கு முன்பாக டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஆசியக் கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. எனவே இந்த இரண்டையும் குறி வைத்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வலிமையான டி20 அணியை உருவாக்க வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்த பிறகு பகுதி நேரமாக பந்து வீசக்கூடிய அவர்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மேலும் சிவம் துபே, நிதீஷ்குமார் ரெட்டி போன்ற ஆல் ரவுண்டர்களுக்கும் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. கம்பீர் தன்னுடைய பாணியில் வித்தியாசமான அணியை உருவாக்குகிறார்.

- Advertisement -

நாங்கள் யாருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை

இதுகுறித்து ரியான் டென்ட் டஸ்கேட் கூறும்பொழுது ” நான் முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக கூற விரும்புகிறேன். அது என்னவென்றால், நாங்கள் எந்த வீரர்களுக்கும் வாய்ப்புகள் கொடுப்பதில்லை, வீரர்களே தங்களுடைய வாய்ப்புகளை சிறப்பாக செயல்பட்டு பெற்றுக் கொள்கிறார்கள்”

“கடந்த ஐபிஎல் தொடரில் இருந்து நிதீஷ் குமார் போன்ற ஒரு வீரர் செய்திருக்கும் வேலை நம்மை மிகவும் கவரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. இந்த அணியில் வரக்கூடிய அனைவருக்குமே இது பொருந்தும். இவர்கள் ஒவ்வொருவருமே மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்”

இதையும் படிங்க : பிசிசிஐ அறிவித்த இந்திய அணியால்.. ஆர்சிபி-க்கு அடித்த ஜாக்பாட்.. வினோத லக் – முழு விபரங்கள்

“நாங்கள் வலுவான வீரர்களை உருவாக்க விரும்புகிறோம். சாம்பியன் டிராபி வரவிருக்கிறது. இதற்கு அடுத்து ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடரும் வரை இருக்கிறது. தற்போது இந்திய கிரிக்கெட்டில் வீரர்கள் எந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். எங்களுடைய ஆழத்தை அறிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -