டிராவிட் மேல சச்சின் கோபமா இருந்தார்.. ஆனா அதுக்கு காரணம் கங்குலிதான் – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
78
Aakash

2004 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான முல்தான் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக ராகுல் டிராவிட் எடுத்த ஒரு முடிவின் காரணமாக சச்சின் மகிழ்ச்சியற்றவராக இருந்ததை முதன்முதலாக பார்த்தேன் என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

குறிப்பிட்ட அந்த டெஸ்ட் போட்டியில் வீரேந்திர சேவாக் முதன் முதலாக முச்சதம் அடித்தார். சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காமல் 194 ரன்கள் எடுத்திருந்தபோது, காயம் காரணமாக கங்குலி இடத்தில் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் ஆச்சரியப்படும் விதமாக இன்னிங்ஸை டிக்ளர் செய்தார். இந்த முடிவு சச்சின் டெண்டுல்கருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அப்போது இல்லை என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த டெஸ்ட்

இந்திய அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் முல்தான் டெஸ்ட் போட்டியில் வீரேந்திர சேவாக் முச்சதம் அடித்தார். ஒரு இந்திய வீரர் முதன் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த நிகழ்வு அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த டெஸ்ட் போட்டிக்குவரலாற்று முக்கியத்துவம் இருக்கிறது.

ஆனால் அதைவிட முக்கியமாக சச்சின் டெண்டுல்கர் அந்த போட்டியில் 194 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்த நிலையிலேயே இன்னிங்ஸை கேப்டன் ராகுல் டிராவிட் டிக்லர் செய்ததுதான் இப்போது வரை பலரது நினைவிலும் நிற்கக் கூடியதாக அமைந்திருக்கிறது. அப்பொழுது ட்ரெஸ்ஸிங் ரூமில் எப்படியான சூழ்நிலை நிலவியது என அணியில் இருந்த ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சச்சின் பாஜி மகிழ்ச்சி அடையவில்லை

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நான் அப்போது ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்தேன். ஆனால் அந்த உரையாடலின் ஒரு பகுதியாக நான் இருக்கவில்லை. உண்மையை சொல்வது என்றால் நான் மிகவும் இளையவனாக இருந்ததால் அந்த உரையாடலில் என்னை நுழைத்துக் கொள்ளவில்லை”

“அதே சமயத்தில் அன்று சச்சின் பாஜி முதல்முறையாக மகிழ்ச்சியற்று இருப்பதை நான் பார்த்தேன். அவர் நிதானத்தை இழந்து நான் பார்க்கவில்லை. ஆனால் அவர் முகத்தில் மகிழ்ச்சி எதுவும் கிடையாது. அவரைப் பார்க்கும் பொழுது ஏதோ சரியில்லை என்று தெரிந்தது”

இதையும் படிங்க : நியூசிலாந்து டெஸ்ட்.. இலங்கை அணி அறிவிப்பு.. 550 நாளுக்கு பிறகு திரும்பிய வீரர்.. அதிரடி திட்டங்கள்

“அப்போதைய கேப்டன் கங்குலி காயத்தின் காரணமாக விளையாடவில்லை. ஆனால் அவர் டிரெஸ்ஸிங் ரூமில் ஒரு பகுதியாக தான் இருந்தார். எனவே இந்த முடிவு டிராவிட் தனிப்பட்டு எடுக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியும். நீங்கள் டிராவிட் முடிவை ஏற்றுக் கொள்ளாமல் கூட போகலாம். ஆனால் சச்சின் இடத்தில் டிராவிட் இருந்திருந்தாலும் இதே முடிவை எடுத்திருப்பார். அவர் ஆடுகளம் உடைந்து இருப்பதையும், பாகிஸ்தான் வீரர்கள் களைப்படைந்து இருப்பதையும் பயன்படுத்த நினைத்தார்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -