18 இரட்டை சதம்.. டான் பிராட்மேனுக்கு கீழ.. புஜாராவை ரோகித் கம்பீர் ஏன் ஒதுக்குறிங்க? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

0
124
Pujara

தற்போது ரஞ்சி டிராபியில் சத்தீஸ்கர் மாநில அணிக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருக்கும் புஜாராவை ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு அழைத்துச் செல்ல பரிசீலனை செய்ய வேண்டும் என ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் புஜாரா விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட வாய்ப்பை புஜாரா பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதைத்தொடர்ந்து இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

- Advertisement -

ரஞ்சி டிராபியில் நீண்ட போராட்ட இன்னிங்ஸ்

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியில் சத்தீஸ்கர் மாநில அணி 578 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்த தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி 478 ரன்கள் 8 விக்கெட் இழப்புக்கு எடுத்து போட்டியை டிரா செய்தது.

இந்த போட்டியில் சௌராஷ்டிரா அணி டிரா செய்வதற்கு களத்தில் நின்ற புஜாரா 383 பந்துகளில் 25 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உடன் 234 ரன்கள் குவித்து முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் அவரை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என ஆகாஷ் சோப்ரா உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

பிராட்மேன் பட்டியலில் புஜாரா

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” இந்திய அணி நிர்வாகம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு புஜாரா பெயரை பரிசீலிக்குமா? கடந்த முறையும் இதே போல் தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக காபா டெஸ்டில் அவர் விளையாடிய விதம் அற்புதமானது. பந்துகளால் அவர் அடி வாங்கி உடல் நீல நிறமாக மாறியதை எல்லோரும் மறந்து விடுகிறார்கள்?”

இதையும் படிங்க : WT20 பைனல்.. உனக்கு சான்ஸ் தரலனு என்ன திட்றது தெரிது.. ஆனா காரணம் இதான்னு ரோஹித் சமாதானம் செஞ்சார் – சாம்சன் பேட்டி

அவர் இதுவரையில் 18 இரட்டை சதங்கள் ஒட்டு மொத்தமாக சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அடித்திருக்கிறார். இந்த பட்டியலை சென்று பார்க்கும் பொழுது அதில் பிராட்மேன், வாலி ஹம்மன்ட், பாட்ஸி ஹென்ட்ரன் ஆகியோருடன் இருக்கிறார். புஜாராவுக்கு கீழே ஹெர்பர்ட் சட்கிளிப் மற்றும் மார்க் ராம்பிரகாஷ் போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருக்கிறார்கள். நிச்சயம் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு புஜாரா பெயரை பரிசீலனையில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -