இந்திய கிரிக்கெட்

இந்தியா 297 ரன்கள் எடுத்தும்.. கம்பீர் மனசுல அந்த குறை கண்டிப்பா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அதிரடியாக விளையாடி 297 ரன்கள் குவித்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட் இரண்டாவது அதிகபட்ச ரன்கள் குவித்த அணியாக இந்தியா உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கௌதம் கம்பீருக்கு இது மனநிறைவை அளித்திருக்காது என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்திய அணி படைத்த சாதனை

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சூழ்நிலையில் மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சஞ்சு சாம்சன், சூரிய குமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடி ஆட்டத்தின் மூலமாக இந்திய அணி 297 ரன்கள் குவித்தது.

300 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மிடில் வரிசையில் சில பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்த காரணத்தால் இந்தியா மூன்று ரன்களில் 300 ரன்கள் என்ற சாதனையை இந்திய அணி தவறவிட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கௌதம் கம்பீர் மூன்று ரன்கள் தவறவிட்ட அந்தக் குறை மனதில் இருக்கும் என்று கூறி சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கௌதம் கம்பீர் மகிழ மாட்டார்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நாம் 297 ரன்கள் குவித்து இருப்பதே நாம் பேச வேண்டிய மிகப்பெரிய விஷயமாக இருக்கிறது. இருப்பினும் 300 ரன்கள் குவித்திருக்க முடியும் என்று யார் நினைத்து இருப்பார்கள். கிரிக்கெட் விளையாடும் எந்த ஒரு நாடும் இவ்வளவு ரன்கள் அடிக்கவில்லை. முன்பு 260 ரன்கள் அதிகபட்சமாக இருந்தது. இப்போது 297 ரன்கள் ஆகியிருக்கிறது.

இதையும் படிங்க:ரூட்டுக்கு இந்த 2 விஷயம் சரியா அமையலனா.. சச்சின் சாதனையை முறியடிக்க முடியாது – இங்கிலாந்து மார்க் புட்சர் பேட்டி

இந்த போட்டியில் ஒன்று இரண்டு பேட்ஸ்மேன்கள் நடுவில் ஆட்டம் இழந்தாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதல் இறுதி வரை அடித்துக் கொண்டே இருப்பார்கள். 300 ரன்கள் அடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் மூன்று ரன்கள் அடிக்கவில்லை என்ற குறை கௌதம் கம்பீர் மனதில் நிச்சயமாக இருக்கும். இருப்பினும் இந்த ரன்கள் மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது” என்று கூறி இருக்கிறார். 2011ம் ஆண்டு உலக கோப்பையில் கௌதம் கம்பீர் 97 ரன்கள் குவித்ததை விட மீதம் இருந்த அந்த மூன்று ரன்களை குவிக்கவில்லை என்ற வடு இருப்பதாக முன்னரே கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts