இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரரான ஜோ ரூட் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சபட்ச பார்மில் இருக்கிறார். களம் இறங்கும் ஒவ்வொரு போட்டியிலும் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறார்.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் புட்சர் ஜோ ரூட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
உச்சபட்ச பார்மில் ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 146 போட்டிகளில் விளையாடி 50.6 பேட்டிங் சராசரியுடன் 12402 ரன்கள் குவித்து அலெஸ்டர் குக்கின் சாதனையை முறியடித்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரராக இருக்கிறார். தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இரட்டை சதம் அடித்து தற்போது மிகச்சிறந்த பேட்டிங் பார்மில் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் ரூட் இந்திய அணியின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரன்கள் சாதனையை முறியடிக்க கூடும் என்ற கருத்து தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நிலவி வரும் சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆனால் மார்க் புட்சர் ஜோ ரூட்டிற்கு சில சூழ்நிலைகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே அவரால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.
சச்சின் சாதனையை முறியடிக்க இது கட்டாயம்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆமாம், நடப்பது அனைத்தும் சரியாக நடக்க வேண்டும். இனிவரும் காலங்களில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படக்கூடாது. மேலும் அவர் அணியில் இருந்து எக்காரணம் கொண்டும் வெளியேறாத சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே அடுத்த இரண்டு அல்லது மூன்று வருடங்களில் ரூட் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கக்கூடும். இங்கிலாந்து தற்போது போதுமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அவர் தற்போது இருக்கும் பார்மில் இருப்பது போன்றே விளையாடினால் அவர் இந்த சாதனையை முறியடிக்கக்கூடும்.
இதையும் படிங்க:என்னால அந்த சிக்ஸர திரும்ப அடிக்க முடியுமான்னு தெரியல.. ஆனா அவங்க 2 பேர் முழு சுதந்திரம் தராங்க – ஹர்திக் பாண்டியா பேட்டி
பல வருடங்களுக்கு முன்பாக ஜாக் நிக்லாஸின் மேஜர் சாதனையை டைகர் முறியடிப்பார் என்று எல்லாரும் சொன்னார்கள். ஆனால் நடந்தது என்ன என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவருக்குப் பிறகு ஜோ ரூட் தற்போது அந்த மாதிரியான வாழ்வில் விளையாடி வருகிறார்.விளையாட்டு என்பது ஒரு வகையான வேடிக்கையான விஷயம். ஒரு காயம் ஏற்படலாம், அல்லது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழலாம். அதற்குப் பிறகு பதிவுகளின் நிலைமை மோசமாகும். ஆனால் தற்போது வரை ரோட்டிற்கு அதுபோல எதுவும் நடக்கவில்லை”என்று கூறியிருக்கிறார். 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டுல்கர் 15921 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






