இதெல்லாம் நல்லதுக்கே கிடையாது.. ஒரே ஒரு வாய்ப்பு வந்தது அதையும் எடுத்துக்கிட்டாங்க – நஜ்முல் சாந்தோ பேட்டி

0
3926
Najmul

பங்களாதேஷ அணி இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியிலும் 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. இந்த தோல்விக்கான காரணம் குறித்து பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ மிகவும் விரக்தியாக பேசியிருக்கிறார்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியும் இந்த முறை பேட்டிங் செய்வதற்காகவே காத்திருந்தது. அதற்கு பங்களாதேஷ் அணி சரியான வாய்ப்பை கொடுத்தது போல் மாறிவிட்டது.

- Advertisement -

நிதீஷ் குமார் ரெட்டி – ரிங்கு சிங் சூறாவளி

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு நெருக்கடி கொடுத்து பங்களாதேஷ் அணி 41 ரன்னில் டாப்ஆர்டரில் மூன்று பேரையும் காலி செய்தது. ஆனால் இதைத் தொடர்ந்து நிதிஷ் குமார் ரெட்டி 34 பந்தில் 74 ரன் ரிங்கு சிங் 29 பந்தில் 53 ரன்கள்அதிரடியாக எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு அதிகபட்சமாக மகமதுல்லாஹ் 39 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். கேப்டன் நஜ்முல் சாந்தோ 7 பந்தில் 11 ரன் எடுத்து இந்த முறையும் ஏமாற்றம் தந்தார். அந்த அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து 86 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணையின் தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் நிதிஷ் குமார் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இது நல்ல விஷயமே இல்லை

இந்த போட்டியில் தோல்வி குறித்து பங்களாதேஷ் கேப்டன் நஜ்முல் சாந்தோ கூறும்பொழுது “நாங்கள் முதல் போட்டியில் செய்த அதே தவறுகளை இப்பொழுதும் தொடர்ந்து செய்தோம். ஒரு அணியாக இது நல்ல விஷயமே கிடையாது. நாங்கள் டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது மிகவும் நல்ல விஷயம். மேலும் நாங்கள் முதல் ஆறு, ஏழு ஓவர்கள் சிறப்பாகவே பந்துவீச்சில் இருந்தோம். அதற்கு மேல் தேவைப்பட்ட இரண்டு விக்கெட்டை எங்களால் எடுக்க முடியவில்லை”

இதையும் படிங்க : வெறும் 90 ரன்.. இலங்கை அணியை வீழ்த்திய இந்தியா.. செமி பைனலுக்கு காத்திருக்கும் செக்.. மகளிர் டி20 உலக கோப்பை 2024

“நாங்கள் சிறப்பான நிலையில் இருந்த பொழுது அதற்குப் பிறகு எங்களுடைய திட்டங்களை எங்களால் சிறப்பான முறையில் செயல்படுத்த முடியவில்லை. மேலும் நாங்கள் பேட்ஸ்மேனாக அதிகநேரம் கிரீசில் நின்று விளையாடவும் இல்லை. இதுவெல்லாம் எங்கள் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -