நான் சீரியஸா சொல்றேன்.. கம்பீர் பண்றது சரியே இல்ல.. அங்க சூழ்நிலையே வேற – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
11
Gill

இந்திய டி20 அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் ரன்கள் எடுப்பதில் தடுமாறி வருகிறார். எனவே தொடக்க ஆட்டக்காரராக ஜெயஸ்வாலை தேர்வு செய்ய வேண்டும் என வெளியில் இருந்து நிறைய குரல்கள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

தற்போது இடைப்பட்ட காலத்தில் இந்திய டி20 அணியில் கில்லுக்கு 10க்கும் மேற்பட்ட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னும் அவர் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. கடந்த இரண்டு போட்டிகளாக அவர் ஆட்டம் இழந்த விதம் மிகவும் மோசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜெய்ஸ்வால்தான் இருந்தார்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “நான் முதலில் இந்திய டி20 அணியின் துணை கேப்டன் கில் பற்றி பேசுவேன். இதற்கு முந்தைய போட்டியில் வேகமாக முயற்சி செய்து ஆட்டம் இழந்தார். கடந்த போட்டியில் அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். பொதுவாக துணை கேப்டனாக இருப்பதால் கொஞ்சம் நீண்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது”

“அவரை தேர்வு செய்தது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருந்த காரணத்தினால் கேள்விகளும் வரத்தான் செய்யும். 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் முதலில் ஜெய்ஸ்வால் இருந்தார். அதற்குப் பிறகு சஞ்சு சாம்சனை கொண்டு வந்தார்கள். பிறகு இருவரையும் கைவிட்டு கில்லை கொண்டு வந்து விட்டார்கள்”

- Advertisement -

மறைக்க முடியாது

“தற்போது இதுகுறித்து கேள்விகள் இருக்கிறது. யாரும் அதை மறைக்க முடியாது. இந்தக் கேள்வியில் இருந்து யாரும் தப்பிக்கவும் முடியாது. நீங்கள் துணை கேப்டன் ரன்கள் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அடுத்த மூன்று போட்டிகளில் கில் நிச்சயம் ரன்கள் எடுத்தாக வேண்டும்”

இதையும் படிங்க : 95 பந்துகளில் 171 ரன்கள் குவித்து வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்.. 7 ரன்களில் இந்திய அளவிலான சாதனை மிஸ் ஆனது

“இன்னும் மூன்று ஆட்டங்கள் இருக்கின்றன. இந்த மூன்று போட்டியிலும் கில் தொடக்க வீரராக தொடர்ந்து விளையாட வேண்டும். மேலும் அவர் ரன்கள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் நியூசிலாந்து டி20 தொடரில் இன்னும் தொடக்க இடம் குறித்து எந்த தீர்வும் கொடுக்கப்படவில்லை என்று பேசப்படும்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -