இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஆகாஷ் சோப்ரா 15 பேர் கொண்ட தனது இந்திய அணியை தேர்வு செய்திருக்கிறார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்திருக்கும் இந்த இந்திய அணியில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் தொடக்க ஆட்டக்காரராக தற்போது டி20 அணியில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் இருவருக்கும் இடம் கொடுக்கவில்லை.
இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் சுப்மன் கில்லை தேர்வு செய்திருக்கிறார். அதே நேரத்தில் ஜெய்ஸ்வாலையும் தேர்வு செய்திருக்கிறார். மேலும் தற்போது பேட்டிங் ஃபார்மில் இல்லாத கில்லுக்கு பதிலாக ஜெய்ஸ்வால் விளையாட வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றாலும் அவர் 15 பேர் கொண்ட அணியில் இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்பாக என்றும், மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களுக்கு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் சந்தேகம் இன்றி தொடர்வார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார். இரண்டாவது விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருப்பார் என்றும், விளையாடும் அணியில் கேஎல்.ராகுலே கீப்பராக இடம் பெறுவார் என்றும் கூறியிருக்கிறார்.
அவர் தேர்வு செய்திருக்கும் இந்த இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, ஷமி, சிராஜ் மற்றும் அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் இவர்களுடன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வருகிறார்.
மேலும் சுழல் பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள். இவருடைய இந்த அணியில் ஆப் ஸ்பின் ஆல் ரவுண்டர்களான ரியான் பராக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் திலக் வர்மாவும் இதில் இடம் பெறவில்லை.
இதையும் படிங்க : ஆஸி தொடரில் விராட் கோலியை தடை செய்திருக்கனும்.. எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு – இங்கிலாந்து ஹார்மிசன் பேச்சு
ஆகாஷ் சோப்ரா இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் லியர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா , ஷமி சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.