இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் நியூசிலாந்து அணி இந்திய அணியை விட 134 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. மேலும் தற்போது ஏழு விக்கட்டுகள் கைவசம் இருக்க இன்னும் மூன்று நாள் ஆட்டம் மீதம் உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் விராட் கோலி
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது பெங்களூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி யாரும் எதிர்பாராத விதமாக 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆச்சரியப்படுத்தியது. இதில் வழக்கமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது வரிசையில் களமிறங்கும் விராட் கோலி, காயம் காரணமாக கில் முதல் போட்டியில் இருந்து விலக்கப்பட அவருக்கு பதிலாக மூன்றாவது வரிசையில் களம் இறங்கினார்.
இருப்பினும் 8 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன் ஏதும் எடுக்காமல் ஒன்பதாவது பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி மூன்றாவது வரிசையில் களமிறங்கியதற்கு பதிலாக கே எல் ராகுலை களம் இறக்கி இருந்தால் நன்றாக இருக்குமா என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
தொந்தரவு செய்ய விரும்பவில்லை
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நீங்கள் கே எல் ராகுலுக்கு நியாயம் தேட முயற்சிக்கிறீர்கள். அவரை ஆறாவது வரிசையில் களமிறங்கி விளையாடச் சொன்னால் அவர் ஆறாவது வரிசைக்கு செல்வார். எல்லாருக்கும் சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் சர்ப்ராஸ் கான் மூன்றாவது வரிசையில் களம் இறக்கி இருக்கலாம். இருப்பினும் அவர் மீது நம்பிக்கை இல்லாததால் ரோஹித் அணி அதை செய்யவில்லை.
இதையும் படிங்க:அந்த ஒரே ஒரு விஷயத்தை தவிர.. ரோஹித் அணிக்கு இன்று எதுவுமே சரியாக நடக்கல – அஜய் ஜடேஜா பேட்டி
சர்ப்ராஸ் விளையாடுவதை பார்க்கும் போது அவருடைய ஆட்டத்தில் இருந்து எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவர் ஒரு மிடில் வரிசை பேட்ஸ்மேன் என்று உணர்கிறீர்கள். அவர் ரஞ்சி டிராபி அணியில் ஐந்தாவது அல்லது ஆறாவது வரிசையில் களமிறங்கி விளையாடுகிறார். இதில் கே எல் ராகுல் முன்னரே அந்த வரிசையில் களமிறங்கி இருந்ததால் அவர்தான் பொருத்தமாக இருக்க முடியும். இருப்பினும் கேஎல் ராகுல் பேட்டிங் வரிசையை தொந்தரவு செய்ய நிர்வாகம் விரும்பாததால் அவரது வரிசை அப்படியே இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






