கேகேஆர் சம்பந்தமா ஸ்ரேயாஸ் ஐயர் சொல்வது பொய்.. என்கிட்ட ஆதாரம் இருக்கு – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
99
Shreyas

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறியது ஏன் என்பது குறித்து தன்னிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக ஆகாஷ் சோப்ரா அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

நடப்பு ஐபிஎல் சாம்பியன் கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியை விட்டு வெளியேறியதும், அந்த அணி நிர்வாகம் அவரை தக்க வைக்காமல் இருந்தது குறித்தும் நிறைய ஆச்சரியங்கள் இருந்தது. தற்போது இது குறித்து வெளியில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் வெளியிட்ட தகவல்

கேகேஆர் அணியை விட்டு வெளியேறியது குறித்து பேசி இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணி நிர்வாகம் வீரர்கள் தக்க வைப்பு குறித்து தன்னிடம் பெரிய அளவில் ஆலோசிக்கவில்லை என்றும், மேலும் ஏலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே யாரை தக்கவைக்கிறோம் என்பது குறித்த பட்டியலை அவர்கள் தன்னிடம் தெரிவித்தார்கள் என்றும், இதனால் ஏற்பட்ட முரண் காரணமாக தான் வெளியேறியதாக கூறியிருந்தார்.

தற்போது இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “நாம் கேகேஆர் அணி நிர்வாகத்தின் கடந்து வந்த பாதையை பார்க்கும் பொழுது, அவர்கள் ரசல் மற்றும் சுனில் நரைன் என தங்களுடைய வீரர்களை தக்க வைப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். தற்பொழுது கூட வெங்கடேஷ் ஐயரை அவர்கள் ஏலத்தில் அதிக தொகைக்கு சென்று மீண்டும் அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் ஒரே அணியை விரும்பக் கூடியவர்கள் என்பது தெளிவாகிறது”

- Advertisement -

என்னிடம் ஆதாரம் இருக்கிறது

“ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணியின் கேப்டனாக இருந்தவர். எனவே அவர்களது திட்டத்தில் நிச்சயம் அவர் இருந்திருக்க வேண்டும். ஆனால் அணி நிர்வாகம் தன்னிடம் பேசவில்லை என்று அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேகேஆர் அணி நிர்வாகம் இரண்டுக்கும் இடையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தை நீண்டதாக இருந்தது உண்மை. அதற்கு என்னிடம் ஆதாரம் உண்டு”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபிய வச்சுக்கிட்டு.. பாபர் அசாமுக்கு இப்படி பண்ணலாமா?.. ரொம்ப தப்பு – பசித் அலி விமர்சனம்

“இருவருக்கும் இடையில் விவாதங்கள் நடந்தது உண்மை. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை என்று சொல்கிறார். சில முரண்பாடுகள் இருந்ததும் உண்மை. இரண்டு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. இத என்னால் உறுதிப்படுத்த முடியும்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

- Advertisement -